இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு

South Africa
South Africa

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இத்தொடர் செப்டம்பர் 15 அன்று தொடங்க உள்ள நிலையில் ஆகஸ்ட் 13 அன்று இத்தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் மற்றும் டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

குவின்டன் டிகாக் டி20 அணியின் கேப்டனாகவும், "ராஷி வென்டேர் தூஸன்" துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். "ராஷி வென்டேர் தூஸன்" சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே தன்னை நிறுபித்துள்ளார். எனவே அவருக்கு துணைக்கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் தென்னாப்பிரிக்க மத்திய ஒப்பந்தத்திலும் இடம்பெற்றுள்ளார். இதேபோல் "தெம்பா பவுமா" தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மைதானங்கள் சுழற்பந்திற்கு சாதகமாக இருக்கும் என்பதால் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் 5 வேகப்பந்து வீச்சாளர்கள் தென்னாப்ரிக்க டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் டெஸ்ட் மற்றும் டி20 அணியில் பல புதுமுக வீரர்கள் தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளனர். அதிரடி பௌலர் ஆன்ரீஜ் நோர்டிச், சுழற்பந்து ஆல்-ரவுண்டர் சேனுராமன் முத்துசுவாமி மற்றும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேன் ரூடி செகன்ட் ஆகியோர் அக்டோபரில் இந்தியாவிற்கு எதிராக தொடங்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அறிமுகமாக உள்ளனர்.

தெம்பா பவுமா, பிஜார்ன் ஃபார்ட்யுன், ஆன்ரிஜ் நோர்டிஜ் ஆகியோர் டெஸ்ட் தொடருக்கு முன்பாக டி20 தொடரில் அறிமுகமாக உள்ளனர். இவர்கள் மூவரும் கடந்த வருடத்தில் நடந்த டி20 லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.

எய்டன் மார்க்ரம், தேனிஷ் தீ புரூன் மற்றும் லுங்கி நிகிடி ஆகியோர் தென்னாப்பிரிக்க டி20 அணியில் கண்டுகொள்ளப்படவில்லை. இருப்பினும் இவர்கள் அனைவரும் இந்திய-ஏ அணிக்கு எதிரான 4 நாள் கொண்ட டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ளனர்.

அணித்தேர்வுக்குழு தலைவர் தென்னாப்பிரிக்க அணித்தேர்வு குறித்து கூறியதாவது:

"இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு சரியான கேப்டனை தேர்வு செய்ய சரியான தொடராக அமையும். 2020 டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில் இத்தொடரே எங்களுக்கு கிடைத்த இறுதி வாய்ப்பாகும். மேலும் டி20 அணியை கட்டமைக்கவும் இத்தொடர் எங்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.
ஃபாப் டூபிளஸ்ஸி ஓடிஐ/டி20 அணித்திட்டத்தில் உள்ளார். தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் சிறந்த ஆட்டத்திறனுடன் விளங்கிய தெம்பா பாவ்மா, பீஜார்ன் ஃபார்டியுன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது அறிவிக்கப்பட்ட அணி மிகவும் பலம் வாய்ந்ததாகும்.
டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள புதுமுக வீரர்கள் உள்ளூர் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணி:

ஃபாப் டபிளஸ்ஸி (கேப்டன்), தெம்பா பவுமா (துணைக்கேப்டன்), தேனிஷ் தீ புரூன், குவின்டன் டிகாக், டின் எல்கர், ஜீபாஹீர் ஹாம்ஜா, சேனுரான் முத்துசுவாமி, கேஷாவ் மஹாராஜ், லுங்கி நிகிடி, அன்ரீஜ் நோர்டிஜ், வெர்னோன் பிளாந்தர், டேன் ரெடிட், காகிஸோ ரபாடா, ரூடி செகன்ட்

தென்னாப்பிரிக்க டி20 அணி:

குவின்டன் டிகாக் (கேப்டன்), ராஸி வென்டேர் துஸன்(துணைக்கேப்டன்), தெம்பா பவுமா, அன்ரீஜ் நோர்டிஜ், ஜீனியர் தாலா, பீஜார்ன் ஃபார்டியுன், பீயூரன் ஹன்ரீக்ஸ், ரீஜா ஹேன்ரிக்ஸ், டேவிட் மில்லர், ஆன்டில் பெஹாலுக்வாயோ, டுவைன் பிரிடோரியஸ், காகிஸோ ரபாடா, தாம்ரைஜ் சம்ஸி, ஜான்-ஜான் ஸ்மட்ஸ்.

Edited by Fambeat Tamil