நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு இந்திய அணி தனது முதல் உலகக்கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மோத உள்ளது. இந்த நீண்ட இடைவெளியினால் ரசிகர்கள் இந்திய அணி மீது வைத்துள்ள அதிக எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது. இந்திய அணி தென்னாப்பிரிக்காவை ஜீன் 5 அன்று சவுத்தாம்டனில் உள்ள ஏஜஸ் பௌல் மைதானத்தில் மோத உள்ளது.
இரு அணிகளும் மிகுந்த வலிமையான பேட்டிங் வரிசையினை கொண்டு திகழ்கின்றனர். அத்துடன் இரு அணிகளில் எந்த அணி வேண்டுமானலும் இப்போட்டியில் வெற்றி பெறலாம். உலகக் கோப்பையில் டாப் ஆர்டர் பேட்டிங் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் அதிக ஓவர்களை எதிர்கொண்டு நிலைத்து விளையாட வேண்டும். தொடக்க பேட்ஸ்மேன் தனது இடத்தை முழுவதும் ஆக்கிரமித்து அதிக ரன்களை விளாச வேண்டும். அத்துடன் ஒரு சிறப்பான இன்னிங்ஸை தனது அணிக்கு அளிக்க வேண்டும் என்ற பொறுப்பு அவர்களிடம் உள்ளது. இது இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரு அணிகளின் முக்கிய குறிக்கோளாக இருக்கும்.
இந்திய அணி உலகின் தலைசிறந்த தொடக்க ஆட்டக்காரர்களை தன் வசம் வைத்துள்ளது. சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் என்று நாம் கூறும் போது முதலில் நமக்கு நியாபகம் வருபவர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் ஆவார். இந்திய அணியின் வழக்கமான தொடக்க ஆட்டக்காரர்களாக 2012லிருந்து ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் உள்ளனர்.
இரு தொடக்க ஆட்டக்காரர்களில் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் சாதனைகளை எடுத்து பார்த்தால் பார்ப்பவர்களை பிரம்மிக்கும் வகையில் உள்ளது. மிடில் ஆர்டரில் தடுமாறி வந்த ரோகித் சர்மா-வை பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்து தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினார் இந்திய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 2013ல் நடந்த இங்கிலாந்து தொடரின் 4வது ஒருநாள் போட்டியில் தோனி, ரோகித் சர்மா-வை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க்கினார். ரோகித் சர்மா இந்த சிறப்பான வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு 83 ரன்களை குவித்தார். இந்த போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறக்கப்படவில்லை. அனைத்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் தொடக்க ஆட்டக்காரராகவே களமிறங்கினார். அந்த இங்கிலாந்து தொடருக்கு பிறகு ரோகித் சர்மா 58 சராசரியுடன் 6032 ரன்களை குவித்துள்ளார். இவர் மொத்தமாக 22 சர்வதேச சதங்களை விளாசியுள்ளார் இதில் 2013ற்குப் பிறகு 20 சதங்களை அடித்துள்ளார்.
மறுமுனையில் ரோகித் சர்மாவின் பார்ட்னர் ஷீகார் தவான் ஆரம்பம் முதலே தொடக்க ஆட்டக்காரராகவே களமிறங்கி வந்தார். இவரது அதிரடி ஆட்டம் 2013 சேம்பியன் டிராபியில்தான் வெளிப்பட்டது. 2013 சேம்பியன் டிராபியிலிருந்து தற்போது வரை ஓடிஐ கிரிக்கெட்டில் தவானின் பேட்டிங் சராசரி 45.96ஆக உள்ளது. அத்துடன் ஷீகார் தவானின் அதிரடி ஆட்டம் ஐசிசி தொடர்களில் எப்பொழுதுமே சிறப்பாகவே இருந்து வந்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 4வது சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் திகழ்கின்றனர். இதுவரை இவர்கள் 101 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி 4541 ரன்களை குவித்துள்ளனர். இவர்கள் ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக இந்திய கிரிக்கெட் வரலாற்றில் உள்ளனர்.
இந்திய அணியில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள் இருப்பதைப் போலவே தென்னாப்பிரிக்கா அணியிலும் ஹாசிம் அம்லா மற்றும் குவின்டன் டிகாக் ஆகியோர் சிறந்த ஆட்டக்காரர்களாக உள்ளனர். இருவரும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்கள். ஹாசிம் அம்லா 175 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 49.51 சராசரியுடன் 7923 ரன்களை குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஹாசிம் அம்லா அதிவேக 2000, 3000, 4000, 5000, 6000 மற்றும் 7000 ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். கடந்த 18 மாதங்களாக இவரது ஆட்டத்திறன் சிறப்பாக இல்லை. 33.87 சராசரியை மட்டுமே பேட்டிங்கில் வைத்துள்ளார். இருப்பினும் உலகக் கோப்பை போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பயிற்சி ஆட்டத்தில் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இவரது பார்டனர் குவின்டன் டிகாக்-கும் அம்லாவிற்கு ஈடு குடுக்கும் அளவிற்கு விளையாடி உள்ளார். இவர் ஒருநாள் கிரிக்கெட்டில் 45.96 சராசரியுடன் 4693 ரன்களை குவித்துள்ளார். அம்லா மற்றும் டிகாக் 87 போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி 47.95 சராசரியுடன் 4028 ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா மற்றும் ஷீகார் தவான் 4வது சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக வலம் வருகின்றனர். டிகாக் மற்றும் அம்லா 5வது சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களாக உள்ளனர்.
தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர்களுடன் ஒப்பிடும் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பானவர்களாக உள்ளனர். இது அவர்களது ஆட்டத்திறன் மற்றும் தரவரிசையில் உள்ள அவர்களது இடங்களை கொண்டு கூறப்பட்டுள்ளது. ஜீன் 5 நடைபெறவுள்ள போட்டியில் இரு அணிகளின் தொடக்க ஆட்டக்காரர்களில் யார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்பதை காண ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.