இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் எதிர்நோக்கவுள்ள 3 விஷயங்கள்

West Indies v India - ICC Cricket World Cup 2019
West Indies v India - ICC Cricket World Cup 2019

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி அடுத்தாக நடைபெறவுள்ள ஒருநாள் தொடரை கைப்பற்றும் நோக்கில் தற்போது உள்ளது. இந்திய அணி உலக கிரிக்கெட்டில் பெரும் ஆதிக்கத்தை அளித்து வந்தாலும் கணிக்கமுடியாத மேற்கிந்தியத் தீவுகளிடம் சற்று கவனமாகவே இருக்க வேண்டும்.

இந்திய அணியில் சமீபத்தில் இடம்பெற்றுள்ள சில புதிய வீரர்களுக்கு இத்தொடர் ஒரு சோதனை போட்டிகளாக இருப்பதால் அவர்களது ஒவ்வொரு பேட்டிங்கும், பௌலிங்கும் உண்ணிப்பாக கவனிக்கப்படும். இந்திய தேர்வுக்குழுவிற்கு நம்பர் 4 பேட்ஸ்மேனை தேர்வு செய்வது மிகப்பெரிய குழப்பமாகவே இருந்து வருகிறது. இதற்காக கடந்த சில ஆண்டுகளாக அதிகபடியான வீரர்களை சோதனை செய்து பார்த்துவிட்டது இந்திய அணி. இந்த பேட்டிங் வரிசைக்காகவே இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் அனைவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை விட்டு வெளியேறுகின்றனர். இதனால் தற்போது வரை இந்திய நம்பர் 4 பேட்டிங் இடம் காலியாகவே உள்ளது. மேற்கிந்திய தீவுகளின் வீரர்கள் சமீப காலமாக மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இதற்கு காரணம் அந்த அணி நிர்வாகம் வீரர்களை நடத்தும் விதம்.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், ஜேஸன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகளும் போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குவின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் மோத உள்ளனர்.

இதற்காக இரு அணிகளும் முழு வேகத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த முக்கியமான போட்டியில் இரு அணிகளும் எதிர்நோக்கவுள்ள 3 விஷயங்களை பற்றி காண்போம்.

அனைவரது பார்வையும் ஸ்ரேயஸ் ஐயர் மீது உள்ளது

Shreyas Iyer would be desperate to cement his spot in the national squad. (Photo courtesy: Getty Images)
Shreyas Iyer would be desperate to cement his spot in the national squad. (Photo courtesy: Getty Images)

2019 உலகக்கோப்பை தொடரை சிறப்பாக முடிக்க தவறிய இந்திய அணி வருங்கால உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு இளம் வீரர்களை இந்திய அணியில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் புதிய இந்திய ஒருநாள் அணியை உருவாக்க கேப்டன் விராட் கோலிக்கு ஒரு அருமையான வாய்ப்பாகும். மிடில் ஆர்டரில் நிலைத்து ரன் குவிப்பில் ஈடுபடும் வீரரை அடையாளம் காண பெரும் தலைவலியாக இந்திய அணிக்கு உள்ளது.

கடந்த ஆண்டுகளாக முதல் தர போட்டிகள் மற்றும் உள்ளூர் தொடர்களில் அசத்தி வரும் ஸ்ரேயஸ் ஐயருக்கு இச்சமயத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்ளூர் கிரிக்கெட்டில் சுழற்பந்து வீச்சில் அதிரடி பௌலிங்கை வெளிபடுத்தி சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்த ஸ்ரேயஸ் ஐயர் நீண்ட காலங்களுக்கு பின்னர் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் ஆடும் XIல் இடம்பெறாத ஸ்ரேயஸ் ஐயர் முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் XIல் சேர்க்கப்பட்டார். இந்திய அணிக்காக 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள இரு அரைசதங்களுடன் 210 ரன்களை குவித்துள்ளார். தமக்கு அளிக்கப்பட்ட குறுகிய வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட ஸ்ரேயஸ் ஐயர் ஒருநாள் போட்டிகளில் 42 சராசரியை வைத்துள்ளார். 2018ன் ஆரம்பத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பின்னர் இந்திய அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு தற்போது திரும்பியுள்ளார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு இந்திய அணியில் தனது இடத்தை உறுதிபடுத்திக் கொள்ளும் நோக்கில் ஸ்ரேயஸ் ஐயர் உள்ளார். இந்திய அணியின் நம்பர் 4 பேட்டிங்கிற்கு இவர் சரியான முடிவாக இருப்பார் என அனைவரும் நம்புகின்றனர்.

கலீல் அகமதுவா அல்லது நவ்தீப் சைனியா ?

Khaled Ahmed
Khaled Ahmed

கலீல் அகமது மற்றும் நவ்தீப் சைனி ஆகிய இருவரும் சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட சிறந்த ஆட்டத்திறன் கொண்ட வீரர்கள். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இவர்கள் இருவரில் ஏதேனும் ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஆடும் XIல் கலீல் அகமது இடம்பெற்றிருந்தார். இவரது பந்துவீச்சை கரேபியன் தொடக்க ஆட்டக்காரர் எவின் லிவிஸ் சரியாக பயன்படுத்தி கொண்டு துவம்சம் செய்தார். அந்த போட்டியில் ராஜஸ்தான் மாநில பௌலர் கலீல் அகமது வீசிய 3 ஒவரில் 27 ரன்களை வாரி இறைத்தார்.

மறுமுனையில் நவ்தீப் சைனி மிகச்சிறந்த பந்துவீச்சை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் வெளிபடுத்தி அதிகபடியான ரன்களை கட்டுபடுத்தினார். இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது வெவ்வேறு கோணங்களில் சிறப்பாக பந்துவீசும் திறன் உடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இனிவரும் போட்டிகளில் கலீல் அகமதுவை விட நவ்தீப் சைனிக்கு சற்று முன்னுரிமை வழங்கப்படும் எனத் தெரிகிறது. மேலும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் தொடர்ந்து சீரான பந்துவீச்சை மேற்கொள்ளும் திறன் உடையவர் நவ்தீப் சைனி.

மேற்கிந்திய தீவுகளின் மிகப்பெரிய கவலை பேட்டிங்

Shai hope
Shai hope

சற்று சிறப்பான பௌலிங்கை கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சுமாரான பேட்டிங் வரிசையை கொண்டு விளங்குகிறது. டி20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்திய அணியின் வலிமையான பௌலிங்கிற்கு முன்பாக மேற்கிந்தியத் பேட்ஸ்மேன்களால் அதிக நேரம் நிலைத்து விளையாட இயலவில்லை. மோசமான பேட்டிங் மற்றும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் டி20 அணியில் இடம்பெறாதது ஆகியன மேற்கிந்தியத் தீவுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முழு பேட்டிங் பொறுப்பும் ஷை ஹோப் மீது இறங்க போகிறது.

சில இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் அதனை முழுமையாக வெளிகொணர தவறுகின்றனர். இதனால் மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டிங் தற்போது வரை கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. கயானாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் முன்பு கரேபியன் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் கூறியதாவது: சமீப காலமாக எங்களது பேட்டிங் மோசமாக இருந்தாலும், 2019 உலகக்கோப்பை தொடரின் மூலம் சில புதிய பேட்டிங் நட்சத்திரங்கள் எங்கள் அணிக்கு கிடைத்துள்ளனர். இனிவரும் போட்டிகளை சரியாக பயன்படுத்தி கொள்வோம்.

நிக்கோலஸ் பூரான் மற்றும் ரோஸ்டன் ஜேஸ் ஆகியோர் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே இந்தியாவிற்கு எதிரான தொடரில் பொறுப்புணர்ந்து இவர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications