மேற்கிந்திய தீவுகளின் மிகப்பெரிய கவலை பேட்டிங்
சற்று சிறப்பான பௌலிங்கை கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அணியில் சுமாரான பேட்டிங் வரிசையை கொண்டு விளங்குகிறது. டி20 தொடரில் மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இந்திய அணியின் வலிமையான பௌலிங்கிற்கு முன்பாக மேற்கிந்தியத் பேட்ஸ்மேன்களால் அதிக நேரம் நிலைத்து விளையாட இயலவில்லை. மோசமான பேட்டிங் மற்றும் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் டி20 அணியில் இடம்பெறாதது ஆகியன மேற்கிந்தியத் தீவுகளுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. கூடிய விரைவில் கிறிஸ் கெய்ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதால் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முழு பேட்டிங் பொறுப்பும் ஷை ஹோப் மீது இறங்க போகிறது.
சில இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினாலும் அதனை முழுமையாக வெளிகொணர தவறுகின்றனர். இதனால் மேற்கிந்தியத் தீவுகளின் பேட்டிங் தற்போது வரை கவலையளிக்கும் விதமாகவே உள்ளது. கயானாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் முன்பு கரேபியன் கேப்டன் ஜேஸன் ஹோல்டர் கூறியதாவது: சமீப காலமாக எங்களது பேட்டிங் மோசமாக இருந்தாலும், 2019 உலகக்கோப்பை தொடரின் மூலம் சில புதிய பேட்டிங் நட்சத்திரங்கள் எங்கள் அணிக்கு கிடைத்துள்ளனர். இனிவரும் போட்டிகளை சரியாக பயன்படுத்தி கொள்வோம்.
நிக்கோலஸ் பூரான் மற்றும் ரோஸ்டன் ஜேஸ் ஆகியோர் உள்ளூர் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். எனவே இந்தியாவிற்கு எதிரான தொடரில் பொறுப்புணர்ந்து இவர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.