#2 விராட் கோலிக்கு (ஓய்வு) பதிலாக சுப்மன் கில்
![Gill has the game and temperament to last the distance. (Picture courtesy: iplt20.com/BCCI)](https://statico.sportskeeda.com/editor/2019/07/c4f97-15633657268096-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/07/c4f97-15633657268096-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/07/c4f97-15633657268096-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/07/c4f97-15633657268096-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/07/c4f97-15633657268096-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/07/c4f97-15633657268096-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/07/c4f97-15633657268096-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/07/c4f97-15633657268096-800.jpg 1920w)
விராட் கோலி கடந்த சில மாதங்களாக இடைவெளியில்லாமல் கிரிக்கெட் விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடருக்குப் பின்னர் உலகக்கோப்பை தொடரில் இந்தியா விளையாடிய 10 போட்டிகளிலும் விராட் கோலி தனது 100% பங்களிப்பை அளித்து வந்தார். உலகக்கோப்பை தொடரை இழந்த விரக்தியில் உள்ள கேப்டன் விராட் கோலிக்கு அதிலிருந்து மீண்டெள சிறிது நாட்கள் அவசியம். எனவே மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள்/டி20 தொடர்களில் இந்திய பேட்டிங் லெஜன்ட் விராட் கோலிக்கு ஓய்வளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுப்மன் கில் இந்திய வருங்கால நட்சத்திர வீரர் என்பதில் சந்தேகமில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இவர் நீண்ட பயணம் மேற்கொள்ளும் தகுதியும் ஆட்டத்திறனும் இவருக்கு உள்ளது. சுப்மன் கில் ரஞ்சிக் கோப்பையில் சிறப்பான பங்களிப்பை அளித்தார் அதைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் நல்ல பேட்டிங்கை வெளிபடுத்தினார்.
சுப்மன் கில், விராட் கோலியின் இயல்பான மாற்று வீரராக உள்ளார். தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் திகழும் இவர் மேற்கிந்தியத் தீவுகள்-ஏ அணிக்கு எதிரான போட்டியில் சமீபத்தில் இரு அரைசதங்களை விளாசியுள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் சுப்மன் கில்-ஐ அணியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் இவர் அணியில் சேர்க்கப்பட்டால் கண்டிப்பாக அந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார் என்பதில் சந்தேகமில்லை.