#3 கேதார் ஜாதவிற்கு பதிலாக க்ருநால் பாண்டியா
கேதார் ஜாதவ் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வருகிறார். இவரது மாயஜால சுழற்பந்து வீச்சின் மூலம் சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார் கேதார் ஜாதவ். மற்ற பௌலர்கள் பந்துவீச்சில் அதிக ரன்கள் வாரி இறைக்கும் போது இந்திய அணியின் 6வது பௌலர் கேதார் ஜாதவ் பந்துவீச அழைக்கப்படுவார். ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியா சிறப்பான பௌலிங்கை தொடர்ந்து மேற்கொண்டு வருவதன் காரணமாக தினேஷ் கார்த்திக் மாற்று வீரராக இந்திய அணியின் ஆடும் XIல் இடம்பெற்றார்.
கேதார் ஜாதவ் நிதானமாக நிலைத்து விளையாடக் கூடியவர், பெரிய ஷாட்களை அவ்வளவாக அவர் விளையாட மாட்டார். இதற்கு சாட்சியாக உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து மோதிய போட்டிகளில் டெத் ஓவரில் அவர் வெளிபடுத்திய பேட்டிங்கை கூறலாம்.
எனவே இவரக்கு மாற்று வீரராக க்ருநால் பாண்டியா மிகவும் சரியாக இருப்பார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அருமையான ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளார். ஐபிஎல் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்ததன் மூலம் இந்திய டி20 அணியில் தனது இடத்தை உறுதி செய்து வைத்துள்ளார். கடைநிலையில் சில பெரிய ஹிட் ஷாட்களை விளையாடும் திறன் கொண்டவர் க்ருநால் பாண்டியா. அத்துடன் தனது நுணுக்கமான பௌலிங் மூலம் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துபவர். இவர் ஒரு சிறந்த முப்பரிமாண வீரர் ஆவார்.