மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் மேற்கொள்ள வாய்ப்புள்ள 5 மாற்றங்கள்

Kohli and Bumrah likely to be rested for the WI tour
Kohli and Bumrah likely to be rested for the WI tour

#4 ஜாஸ்பிரிட் பூம்ரா-விற்கு (ஓய்வு) பதிலாக நவ்தீப் சைனி

Navdeep Saini was the go-to option for virat Kohli in IPL. (Picture courtesy: iplt20.com/BCCI)
Navdeep Saini was the go-to option for virat Kohli in IPL. (Picture courtesy: iplt20.com/BCCI)

சமீபத்தில் முடிந்த உலகக்கோப்பை தொடரில் ஜாஸ்பிரிட் பூம்ரா தான் ஒரு சிறந்த பௌலர் என மீண்டும் மீண்டும் நிருபித்துள்ளார். உலகின் நம்பர் 1 பௌலரான இவர் இந்திய பௌலிங்கின் முதுகெலும்பாக உள்ளார். உலகக்கோப்பையில் இந்திய அணியின் சிறந்த வீரராகவும் திகழ்ந்தார். மேலும் 2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி சேம்பியன் பட்டத்தை வெல்ல தனது அதிரடி பௌலிங் மூலம் உதவியாக இருந்தார். கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வரும் பூம்ராவை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஓடிஐ/டி20 தொடர்களுக்கு அனுப்ப இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை.

தொடர்ந்து 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்ட சில பௌலர்களுள் நவ்தீப் சைனி-யும் ஒருவர். 2019 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக சில சிறந்த பௌலிங்கை வெளிபடுத்திய நவ்தீப் சைனிக்கு, இந்திய உலகக்கோப்பை அணியின் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் இடம் கிடைத்தது. தற்போது மேற்கிந்தியத் தீவுகள்-ஏ அணிக்கு எதிரான இந்திய-ஏ அணியில் சிறப்பான பங்களிப்பை நவ்தீப் சைனி அளித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். தற்போது சற்று மேம்பட்ட வீரராக திகழும் இவர் பூம்ராவிற்கு மாற்று வீரராக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Quick Links