மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் மேற்கொள்ள வாய்ப்புள்ள 5 மாற்றங்கள்

Kohli and Bumrah likely to be rested for the WI tour
Kohli and Bumrah likely to be rested for the WI tour

#5 குல்தீப் யாதவிற்கு பதிலாக ஸ்ரேயஸ் கோபால்

Shreyas Gopal had a dream IPL 2019 (Picture courtesy: iplt20.com/BCCI)
Shreyas Gopal had a dream IPL 2019 (Picture courtesy: iplt20.com/BCCI)

கடந்த 4 மாதங்களாக குல்தீப் யாதவின் பௌலிங் அவ்வளவு சிறப்பானதாக இல்லை. ஐபிஎல் தொடரில் சில மோசமான பந்துவீச்சின் மூலம் கொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் ஆடும் XIலிருந்து நீக்கப்பட்டார். உலகக்கோப்பை தொடரிலும் 7 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார்.

இதனால் லெக் ஸ்பின்னர் யுஜ்வேந்திர சகாலுடன், இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பந்துவீச அழைக்கப்பட்டார். குல்தீப் யாதவ் விக்கெட் வீழ்த்த சற்று தடுமாறியும், ஃபீல்டிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பியும் வருவதன் காரணமாக இந்திய அணி நிர்வாகம் அணியிலிருந்து வெளியேற்ற வாய்ப்புள்ளது.

குல்தீப் யாதவிற்கு சரியான மாற்று வீரராக ஸ்ரேயஸ் கோபால் இருப்பார். 2019 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சில முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெத் ஓவரில் பேட்ஸ்மேன் ஒருவர் தனது விக்கெட்டை இழந்து விட்டால் ஸ்ரேயஸ் கோபால் அந்த இடத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த சரியான வீரராக இருப்பார். இவரது ஃபீல்டிங்கும் அற்புதமாக உள்ளது. இந்திய அணி வருங்காலத்தில் ஸ்ரேயஸ் கோபால் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை சுழற்பந்து வீச்சாளராக எடுத்துச் சென்றால் கண்டிப்பாக இருவரும் தங்களது முப்பரிமான ஆட்டத்தை வெளிபடுத்துவார்கள் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் இந்திய-ஏ அணியிலும் இடம்பிடித்து தனது இயல்பான ஆட்டத்திறனை ஸ்ரேயஸ் கோபால் வெளிக் கொண்டு வந்தார்.

Quick Links

App download animated image Get the free App now