#3 ஷிகார் தவான்
2019 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணியின் இரண்டாவது போட்டியில் ஷிகார் தவானின் பெருவிரலில் ஏற்பட்ட முறிவிற்கு பின்னர் அதிலிருந்து மீண்டு மீண்டும் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார். இப்போட்டியில் தனது காயத்தையும் பொருட்படுத்தாமல் 17வது ஒருநாள் சதத்தை விளாசி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
தவானை இந்திய அணி மிகவும் அதிகமாக உலகக்கோப்பை தொடரில் மிஸ் செய்தது. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஷிகார் தவான் மற்றும் ரோகித் சர்மா இணைந்து சிறப்பான பேட்டிங்கை வெளிபடுத்தியுள்ளனர். தவான் விலகல் மற்றும் வலுலில்லாத மிடில் ஆர்டர் இந்திய அணியை உலகக்கோப்பை தொடரில் மிகவும் பாதித்தது.
ஷிகார் தவானிற்கு தற்போது வயது 33. மயான்க் அகர்வால், லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா போன்ற இளம் வீரர்கள் இந்திய தொடக்க பேட்டிங்கிற்கு போட்டி போடுவதால் ஷிகார் தவான் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை சாதரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார். கடந்த முறை மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுபயணத்தில் இடம்பெறாத ஷிகார் தவான் தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வார்.
தவான் ஒரு அதிரடி ஆட்டக்காரர். வேகப்பந்து மற்றும் பவுண்ஸை துவம்சம் செய்யும் இவருக்கு மேற்கிந்தியத் தீவுகள் ஆடுகளங்கள் மிகவும் உதவியாக இருக்கும். கரேபியன் மண்ணில் சற்று சுமாரான சாதனையை மட்டுமே படைத்துள்ள ஷிகார் தவானிற்கு அதனை மேம்படுத்த இத்தொடர் மிகவும் உதவியாக இருக்கும். இவர் மேற்கிந்தியத் தீவுகளில் 14 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 26.07 சராசரியுடன் 365 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதனை கண்டிப்பாக தவான் உயர்த்துவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.