#2 ரவீந்திர ஜடேஜா
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் மூன்று வகையான (டெஸ்ட், ஓடிஐ, டி20) கிரிக்கெட் அணியிலும் இடம்பெற்றுள்ள இந்திய பௌலர் ஆவார். இவர் இடைபட்ட சில காலங்களில் ஓடிஐ/டி20 போட்டிகளில் இடம்பெறவில்லை. பின்னர் 2018 ஆசியக் கோப்பை மற்றும் 2019 ஐபிஎல் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய காரணத்தால் உலகக்கோப்பை தொடரில் இடம்பெறும் வாய்ப்பு கிடைத்தது.
2019 உலகக்கோப்பை தொடரின் பெரும்பாலான போட்டிகளில் ரவீந்திர ஜடேஜா இடம்பெறவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக அனைத்து போட்டிகளிலும் மாற்று ஃபீல்டராக களம் கண்டு பெரும் பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்தார். 2019 உலகக்கோப்பை தொடரில் இரு போட்டிகளில் மட்டுமே ஜடேஜா ஆடும் XIல் இடம்பெற்றார். குறிப்பாக நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியை கிட்டத்தட்ட வெற்றிப்பாதைக்கு ஜடேஜா அழைத்து சென்று விட்டார்.
பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என மூன்றிலும் அசத்தும் திறமை கொண்ட ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா. இவர் ஒரு சிறந்த ஃபீல்டராகவும் மற்றும் நம்பர் 1 இடதுகை சுழற்பந்து வீச்சாளராக தற்போது திகழ்கிறார். கடைநிலையில் ஜடேஜாவின் பேட்டிங் மிகவும் அதிரடியாக இருக்கும்.
உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் நாயகனாக திகழ்ந்த ஜடேஜா மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய வீரர் ஆவார். ஜடேஜா தனது சமீபத்திய ஆட்டத்திறனை தொடருவாரா என்பதைக் காண மிகவும் ஆர்வமாக ரசிகர்கள் உள்ளனர்.