#1 விராட் கோலி
உலகின் நம்பர் டெஸ்ட் மற்றும் ஓடிஐ பேட்ஸ்மேனான விராட் கோலியின் விக்கெட்டுகளை வீழ்த்த ஒவ்வொரு அணியும் களமிறங்குகிறது.
உலகக்கோப்பை ஒரு சராசரியான பேட்டிங்கை வெளிபடுத்திய விராட் கோலி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தும் நோக்கில் களம் காண உள்ளார். உலகக்கோப்பை தொடரில் 55.38 சராசரியுடன் ரன் குவிப்பில் ஈடுபட்ட விராட் கோலியால் ஒரு சதம் கூட விளாச இயலவில்லை. இது அனைவராலும் கவனிக்கப்பட்டு வந்தது.
நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதியிலிருந்து இந்தியா வெளியேறிய பிறகு ஓடிஐ மற்றும் டி20யில் விராட் கோலியின் கேப்டன்ஷீப் மீது அதிக கேள்விகள் எழுந்து வந்த வண்ணம் உள்ளன. இதற்கு முடிவு கட்டும் வகையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அவர் அழைத்து செல்ல வேண்டும். இதன் மூலமே இவர் மீதான விமர்சனங்களை முடிவுக்கு கொண்டு வர இயலும்.
விராட் கோலி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 70.81 சராசரியுடன் 1912 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். இதற்கு முன் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் சர் விவ் ரிச்சர்ட்ஸன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இரட்டை சதம் விளாசியுள்ளார். எனவே கரேபியன் தொடரில் விராட் கோலி இந்திய அணியின் துருப்புச் சீட்டு என்பதில் சந்தேகமில்லை.