கிறிஸ் கெய்லை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா...

Pravin
ரோஹித் சர்மா, கோலி
ரோஹித் சர்மா, கோலி

மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில் மூன்று டி-20 போட்டிகளை கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் முதல் டி-20 போட்டி கடந்த 3ம் தேதி மேற்கு இந்திய தீவுகளில் உள்ள ஃப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் ரஸல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர் இடம் பெறாத நிலையில் ப்ராத்வெய்ட் தலைமையில் மேற்கு இந்திய தீவுகள் அணி விளையாடி வருகின்றது.

முதல் டி-20 போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் மோசமான பேட்டிங்கின் காரணமாக மேற்கு இந்திய தீவுகள் அணி 96 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் இந்தியா அணி இந்த எளிய இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டி-20 போட்டி மேற்கு இந்திய தீவுகளில் உள்ள ஃப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களம் இறங்கிய இந்தியா அணியில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். கடந்த முதல் டி-20 போட்டியில் இந்த ஜோடி நிலைத்து விளையாட தடுமாறிய நிலையில் இந்த போட்டியில் இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஆட்டத்தின் முதல் ஆறு ஓவர்கள் நிலைத்து விளையாடிய இந்த ஜோடி 52 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஷிகார் தவண் 23 ரன்னில் கீமோ பால் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த ரோஹித் சர்மா அரைசதம் விளாசினார்.

ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா

அதோடு டி-20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற புதிய சாதனையும் படைத்தார். இதற்கு முன்னர் கிறிஸ் கெய்ல் 105 சிக்ஸர்கள் அடித்து முதல் இடத்தில் இருந்த நிலையில் இந்த போட்டியில் ரோஹித் சர்மா மூன்று சிக்ஸர்கள் விளாசியனார். அதை தொடர்ந்து 107 சிக்ஸர்கள் அடித்து சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் கிறிஸ் கெய்ல் 105 சிக்ஸர்களுடனும் மூன்றாம் இடத்தில் நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில் 103 சிக்ஸர்களுடனும் நான்காவது இடத்தில் மற்றோரு நியூசிலாந்து அணி வீரர் கோலின் மன்ரோ 92 சிக்ஸர்களுடனும் உள்ளனர். அதன் பின்னர் நிலைத்து விளையாடிய ரோஷித் சர்மா 67 ரன்களில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ரிஷப் பன்ட் கடந்த போட்டியில் முதல் பந்திலேயே டக்அவுட் ஆகி வெளியேறி நிலையில் இந்த போட்டியில் நிலைத்து விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியிலும் 4 ரன்களில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

அதனை தொடர்ந்து நிலைத்து விளையாடி கொண்டிருந்த கேப்டன் விராட் கோலியும் 28 ரன்களில் காட்ரெல் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதை தொடர்ந்து களம் இறங்கிய மனிஷ் பான்டே 6 ரன்களில் அதே காட்ரெல் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரவிந்திர ஜடேஜா மற்றும் க்ருனாள் பாண்டியா இருவரும் நிலைத்து விளையாடினர். கடைசி ஓவர்களில் இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 167 என்ற இலக்கை நிர்ணயித்தது.

புவனேஷ்வர் குமார்
புவனேஷ்வர் குமார்

அதன் பின்னர் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் சுனில் நரைன் மற்றும் எவின் லிவிஸ் இருவரும் களம் இறங்கினர். புவனேஷ்வர் குமார் வீசிய இரண்டாவது ஓவரிலேயே லிவிஸ் டக்அவுட் ஆகி வெளியேறிய நிலையில் அடுத்த ஓவரிலேயே சுனில் நரைன் 2 ரன்னில் வாஷிங்டன் சுந்தர் ஓவரில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த நிகோலஸ் பூரன் மற்றும் ரோமன் பவுல் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினர். குறிப்பாக ரோவன் பவுல் அதிரடியாக விளையாடிய நிலையில் அரைசதம் விளாசினார்.

க்ருனாள் பாண்டியா
க்ருனாள் பாண்டியா

54 ரன்னில் க்ருனாள் பாண்டியா பந்தில் அவுட் ஆகி வெளியேறி பூரனும் 19 ரன்னில் க்ருனாள் பாண்டியா பந்தில் அவுட் ஆகினார். இருவரும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் அதன் பின்னர் களம் இறங்கிய கீரேன் பொலார்ட் மற்றும் ஹெட்மயர் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் நடுவில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் தடை பெற்ற நிலையில் டிஎல்எஸ் முறையில் இந்தியா அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் முலமாக இந்த டி-20 தொடரை 2-0 என்ற நிலையில் கைபற்றியுள்ளது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now