மேற்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்ட இந்தியா அணி மூன்று டி-20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இந்த மேற்கு இந்திய தீவுகள் சுற்றுபயணத்தில் முதலில் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடியது இதில் இந்தியா அணி 3-0 என்ற கணக்கில் மிகபெரிய வெற்றி பெற்ற நிலையில் அதை தொடர்ந்து மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்றது. இதில் முதல் ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள போர்ட் ஆப் ஸ்பின் மைதானத்தில் நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி டிஎல்எஸ் முறையில் 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள போர்ட் ஆப் ஸ்பின் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியுடன் மேற்கு இந்திய தீவுகள் அணியின் நட்சத்திர அதிரடி மன்னன் யுனிவர்சல் பாஸ் கிறிஸ் கெய்ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ள நிலையில் இந்த போட்டி கிறிஸ் கெய்லின் கடைசி ஒரு நாள் போட்டி என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லீவிஸ் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே மழை குறிக்கிட்டதால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்ட நிலையில் அதன் பின்னர் தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்திய தொடக்க ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியது.
குறிப்பாக கிறிஸ் கெய்ல் புவனேஷ்வர் குமார் மற்றும் முகமத் சமி ஆகிய இருவரின் பந்துகளையும் சிக்ஸர் மழை பொழிந்தார். இருவரும் அதிரடியாக விளையாட மேற்கு இந்திய தீவுகள் அணி 9வது ஓவரிலேயே 100 ரன்களை கடந்தது. அதிரடியாக விளையாடி கொண்டிருந்த எவின் லீவிஸ் 43 ரன்னில் யூகேந்திர சாஹல் பந்தில் அவுட் ஆகினார். அதை தொடர்ந்தும் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த கிறிஸ் கெய்ல் 72 ரன்னில் கலில் அகமத் பந்தில் அவுட் ஆகி தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அதன் பின்னர் ஷாய் ஹோப் மற்றும் ஹெட்மயர் இருவரும் களத்தில் இருந்த நிலையில் மீண்டும் மழை குறிக்கிட்டது.
அதை தொடர்ந்து சிறிது நேரம் சென்று ஆட்டம் தொடங்கிய நிலையில் ஹெட்மயர் 25 ரன்னில் முகமத் சமி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் சிறிது நேரம் நிலைத்து விளையாடிய நிலையில் ஷாய் ஹோப் 24 ரன்னில் ரவிந்திர ஜடேஜா பந்தில் அவுட் ஆகினார். அதை தொடரந்து களம் இறங்கிய கேப்டன் ஹோல்டர் மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த நிலையில் 35 ஓவர்களில் மழை குறிக்கிட மேற்கு இந்திய தீவுகள் அணி 240-7 ரன்களை எடுத்தது.
அதன் பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரிலேயே ரோஹித் சர்மா 10 ரன்னில் ரன்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆட்டத்தின் போக்கை மாற்றினார். மறுமுனையில் விளையாடிய ஷிகார் தவண் வழக்கம் போல் 36 ரன்னிலேயே ஆலன் பந்தில் அவுட் ஆகி நடையை கட்டினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய இளம் வீரர் ரிஷப் பன்ட் தனது வழக்கமான 0 ரன்னில் டக்அவுட் ஆகி மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வெளியேறினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருவரும் நான்காவது விக்கெட்டிற்கு 120 ரன்கள் குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 65 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேதர் ஜாதவ் நிலைத்து விளையாட மறுமுனையில் தனது அடுத்த சதத்தை குறிவைத்தார்.
ஒரு நாள் போட்டிகளில் தனது 43வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணி 32.3 ஓவரிலேயே 256 ரன்களை அடித்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஒடிஐ தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் இந்த தொடரின் தொடர் நாயகன் ஆகிய இரு விருதையும் விராட் கோலி பெற்று கொண்டார்.