அதன் பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு 35 ஓவர்களில் 255 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரிலேயே ரோஹித் சர்மா 10 ரன்னில் ரன்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.
அதை தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி நம்பிக்கை அளிக்கும் விதமாக ஆட்டத்தின் போக்கை மாற்றினார். மறுமுனையில் விளையாடிய ஷிகார் தவண் வழக்கம் போல் 36 ரன்னிலேயே ஆலன் பந்தில் அவுட் ஆகி நடையை கட்டினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய இளம் வீரர் ரிஷப் பன்ட் தனது வழக்கமான 0 ரன்னில் டக்அவுட் ஆகி மோசமான ஆட்டத்தை வெளிபடுத்தி வெளியேறினார்.
அதன் பின்னர் களம் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். இருவரும் நான்காவது விக்கெட்டிற்கு 120 ரன்கள் குவித்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் 65 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேதர் ஜாதவ் நிலைத்து விளையாட மறுமுனையில் தனது அடுத்த சதத்தை குறிவைத்தார்.
ஒரு நாள் போட்டிகளில் தனது 43வது சதத்தை பூர்த்தி செய்தார். இந்திய அணி 32.3 ஓவரிலேயே 256 ரன்களை அடித்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஒடிஐ தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இந்த போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் இந்த தொடரின் தொடர் நாயகன் ஆகிய இரு விருதையும் விராட் கோலி பெற்று கொண்டார்.