3-0 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்திய இந்திய அணி....

Pravin
Indian team
Indian team

இந்திய அணி மேற்க்கு இந்திய தீவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள் கொண்டு தொடர், மூன்று ஒரு நாள் போட்டிகள் தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட மூன்று வகையான கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் முதலில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன. முதல் இரண்டு டி-20 போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ள நிலையில் கடைசி மற்றும் மூன்றாவது டி-20 போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள கயானா என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்ற நிலையில் இந்த கடைசி டி20 போட்டியில் ஆறுதல் வெற்றி பெற மேற்கு இந்திய தீவுகள் அணி முணைப்பு காட்டியது. இந்திய அணியை பெறுத்த வரை தொடரை முழுமையாக வெல்ல வேண்டும் என்ற நோக்கி விளையாடினர். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியை பெறுத்த வரை ரோஹித் சர்மா மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் அணியில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டு இந்திய அணியில் தீபக் சஹார் மற்றும் ராகுல் சஹார் அணியில் இணைக்கப்பட்டனர். ஏற்கனவே இந்த மேற்கு இந்திய தீவுகள் சுற்றுபயணத்தில் தோனி மற்றும் ஹர்டிக் பாண்டியா போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மேற்கு இந்திய தீவுகள் அணியில் தொடக்க வீரர்கள் சுனில் நரைன் மற்றும் எவின் லேவிஸ் ஆகிய இருவரும் களம் இறங்கினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரைன் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே 2 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். தீபக் சஹாரின் சிறப்பான பந்து வீச்சின் மூலம் அவர் வீசிய இரண்டாவது ஓவரில் எவின் லேவிஸ் 10 ரன்னில் அவுட் ஆகினார். ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் தீபக் சஹார் இரண்டு விக்கெட்களை வீழத்தி ஆட்டத்தின் போக்கை தொடக்கத்திலேயே மாற்றி அமைத்தார். அதே ஓவரில் ஹெட்மயர் 1 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார்.

தீபக் சஹார்
தீபக் சஹார்

இதை தொடர்ந்து களம் இறங்கிய நிக்கோலஸ் பூரன் மற்றும் கீரேன் பொலார்ட் இருவரும் சிறுது நேரம் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி விளையாடினர். நிக்கோலஸ் பூரன் 17 ரன்கள் எடுத்திருந்த போது நந்திப் சைனி வீசிய ஓவரில் அவுட் ஆகி வெளியேறினார். அதை தொடர்ந்து களம் இறங்கிய ரோமன் பவுல் நிலைத்து விளையாட மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார் கீரேன் பொலார்ட் சிக்ஸர் மழை பொழிந்த பொலார்ட் அரைசதம் வீளாசினார்.

பொலார்ட் 58
பொலார்ட் 58

ஆறு சிக்ஸர்கள் அடித்த பொலார்ட் 58 ரன்னில் சைனி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் ப்ராத்வெய்ட் 10 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆக ரோமன் பவுல் 38 ரன்களுடனும் ஆலோன் 8 ரன்களுடனும் கடைசி வரை களத்தில் இருந்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 146-6 ரன்களை சேர்த்தது.

அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மாக்கு பதில் அணியில் இடம் பிடித்த கே.எல்.ராகுல் மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷிகார் தவண் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே 3 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை தவறவிட்டார். கே.எல்.ராகுல் 20 ரன்னில் ஆலன் சுழலில் அவுட் ஆகி வெளியேறினார்.

ரிஷப் பன்ட்
ரிஷப் பன்ட்

அதன் பின்னர் கேப்டன் கோலி உடன் ரிஷப் பன்ட் இணைந்தார். இந்த தொடரில் இரண்டு போட்டிகளிலும் விளையாட்டிய ரிஷப் பன்ட் நான்கு ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் இந்த போட்டியில் நிலைத்தே விளையாட வேண்டிய காட்டயத்தில் இருந்த நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி அரைசதம் விளாசினார்.

விராட் கோலி
விராட் கோலி

அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்ட் நான்கு சிக்ஸர் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் சேர்த்து அவரும் அரைசதம் விளாச இந்திய அணி வலுவான நிலைக்கு சென்றது. கோலி 59 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகிய நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. ரிஷப் பன்ட் 65 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய அணி இந்த டி-20 போட்டி தொடரை 3-0 என்று வென்று அசத்தியது.

Quick Links

Edited by Fambeat Tamil
App download animated image Get the free App now