அதன் பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மாக்கு பதில் அணியில் இடம் பிடித்த கே.எல்.ராகுல் மற்றும் ஷிகார் தவண் இருவரும் களம் இறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷிகார் தவண் இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே 3 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்னர் களம் இறங்கிய கேப்டன் விராட் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கே.எல்.ராகுல் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை தவறவிட்டார். கே.எல்.ராகுல் 20 ரன்னில் ஆலன் சுழலில் அவுட் ஆகி வெளியேறினார்.
அதன் பின்னர் கேப்டன் கோலி உடன் ரிஷப் பன்ட் இணைந்தார். இந்த தொடரில் இரண்டு போட்டிகளிலும் விளையாட்டிய ரிஷப் பன்ட் நான்கு ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் இந்த போட்டியில் நிலைத்தே விளையாட வேண்டிய காட்டயத்தில் இருந்த நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி அரைசதம் விளாசினார்.
அவரை தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்ட் நான்கு சிக்ஸர் மற்றும் நான்கு பவுண்டரிகளுடன் சேர்த்து அவரும் அரைசதம் விளாச இந்திய அணி வலுவான நிலைக்கு சென்றது. கோலி 59 ரன்னில் ஓஷேன் தாமஸ் பந்தில் அவுட் ஆகிய நிலையில் இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. ரிஷப் பன்ட் 65 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். இந்திய அணி இந்த டி-20 போட்டி தொடரை 3-0 என்று வென்று அசத்தியது.