விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி 20 சுற்றுப்பயணத் தொடர்களில் அனைத்து போட்டிகளிலும் வெற்றிகளைப் மட்டுமே பதிவு செய்து வருகிறது. இரண்டு ஆட்டங்களில் 234 ரன்கள் எடுத்ததன் பின்னர் ஒருநாள் போட்டிகளுக்கான ஆட்ட நாயகனாக இந்திய கேப்டன் விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். 3 வது ஒருநாள் போட்டியில் அவர் ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் விளாசியுள்ளார். அவர் ஆட்ட நாயகன் பட்டத்தை பெற்றது மட்டுமல்லாமல், ஒரு தசாப்தத்தில் 20,000 ரன்கள் எடுத்த முதல் வீரராக மிகப் பெரிய சாதனையை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த ஜாவேத் மியாண்டட்டின் 26 வயதான சாதனையையும் இந்திய கேப்டன் விராட் கோலி முறியடித்து தனது சாதனை பட்டியலை அதிகரித்துக் கொண்டு இருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி மிகவும் ஆதிக்கம் செலுத்தும் அணிகளில் ஒன்றாக இருக்கின்றது. இந்திய அணி விளையாடிய கடைசி 10 டெஸ்ட் போட்டித் தொடர்களில் 8 தொடரில் வென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக, இந்திய அணி கடந்த 5 டெஸ்ட் போட்டித் தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. இந்திய அணிக்கு எதிரான கடைசி 5 டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு போட்டியில் கூட வெற்றியைப் பதிவு செய்யத் தவறிவிட்டது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தங்கள் கேப்டன் ஜேசன் ஹோல்டரை இந்தாண்டுக்கான விருது வழங்கும் விழாவில் இந்த ஆண்டின் ஆண்கள் டெஸ்ட் வீரராக தேர்வு செய்யப்பட்டார். ஹோல்டர் 2018 ஜனவரி முதல் தற்போதுவரை 40 விக்கெட்டுகளுடன் 51.36 சராசரியை கொண்டு 565 ரன்கள் எடுத்து சிறந்த நிலைமையில் இருக்கிறார்.
இனி வரவிருக்கும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி மூன்று முக்கிய சாதனைகளை படைக்க இருக்கிறார்.
# 1. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மிக வெற்றிகரமான கேப்டனாக மாறும் கோலி !
விராட் கோலி 2014 டிசம்பரில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக பதவியேற்றார். கடந்த 5 ஆண்டுகளில், விராட் கோலி இந்திய அணியில் புரட்சியை ஏற்படுத்தி மாபெரும் உயரங்களை குறுகிய காலத்திலேயே எட்டி சாதானை படைத்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான எம்.எஸ்.தோனி தற்போது 60 போட்டிகளில் 27 வெற்றிகளுடன் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக அதிக வெற்றிகளைப் பதிவு செய்த சாதனையைப் படைத்து முன்னிலையில் இருக்கிறார். அதே நேரத்தில் தனது 46 போட்டிகளில் 26 போட்டிகளில் வென்ற கேப்டனாக விராட் கோலி இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இந்த 2 டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றால் மட்டுமே விராட் கோலி தோனியின் சாதனையை மிஞ்ச முடியும்.