மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடருக்கு இந்திய -ஏ அணி அறிவிப்பு

Shreyas Iyer caption for India-A Team
Shreyas Iyer caption for India-A Team

இந்திய-ஏ அணி ஜீலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட்(4 நாள்) மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பெறும் நோக்கில் விருத்திமான் சாகா ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய-ஏ அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் கடைசியாக 2018ஆம் ஆண்டு கேப்டவுனில் முதல் தர போட்டியில் விளையாடினார். தற்போது சாகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவிருக்கும் டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்த அணியில் எஸ் பரத் மற்றொரு விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார்.

மறுமுனையில் தற்போதைய இந்திய டெஸ்ட் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நடைபெற உள்ள 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் அணியில் இடம்பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியும் உலகக் கோப்பை முடிந்த பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கு தான் டெஸ்ட் சேம்பியன் ஷீப்பில் தனது முதல் இரு டெஸ்ட் போட்டிகளை தொடங்க உள்ளது. அத்துடன் ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளிலும் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் தற்போதைய தொடக்க ஆட்டக்காரர்கள் மயான்க் அகர்வால் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரும் இந்திய-ஏ அணியில் இடம்பெற்றுள்ளனர். இருப்பினும் இவர்கள் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய-ஏ அணியில் பங்கேற்க மாட்டார்கள். அவர்களுக்கு மாற்றாக பிரியன்க் பன்சல் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் முதல் இரு டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்ரேயஸ் ஐயர் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹனுமா விகாரி மற்றும் சுப்மன் கில் ஆகியோரும் இந்த டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளனர். நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர், ஏவிஸ் கான், முகமது சிராஜ் ஆகியோர் பந்துவீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர். சிவம் தூபே மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோர் இரு ஆல்-ரவுண்டர்களாக இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

ஒருநாள் போட்டிகளில் மனிஷ் பாண்டே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜீலை 1 அன்று தொடங்கும் ஒருநாள் தொடரில் பிரித்வி ஷா, மயான்க் அகர்வால் மற்றும் சுபமன் கில் ஆகியோர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக களமிறங்க உள்ளனர். மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், மனிஷ் பாண்டே, ஸ்ரேயஸ் ஐயர், ஹனுமா விகாரி ஆகியோர் உள்ளனர். வாஷிங்டன் சுந்தர், க்ருநல் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகியோர் ஆல்-ரவுண்டராக இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். ராகுல் சகார் சுழற்பந்து வீச்சாளராகவும், தீபக் சகார், நவ்தீப் சைனி, ஏவிஸ் கான், கலீல் அகமது ஆகியோர் வேகப்பந்து வீச்சாளர்களாகவும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய-ஏ அணி

மனிஷ் பாண்டே (கேப்டன்), மயான்க் அகர்வால், பிரித்வி ஷா, சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விகாரி, ரிஷப் பண்ட், ராகுல் சகார், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், க்ருநல் பாண்டியா, தீபக் சகார், நவ்தீப் சைனி, கலீல் அகமது, ஏவிஸ் கான்

முதல் இரு நான்கு நாள் டெஸ்ட் போட்டிக்கான இந்திய-ஏ அணி

ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), பிரியன்க் பன்சல், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், ஹனுமா விகாரி, சிவம் தூபே, கிருஷ்ணப்பா கௌதம், விருத்திமான் சாகா (விக்கெட் கீப்பர்), கே எஸ் பரத்(விக்கெட் கீப்பர்), நவ்தீப் சைனி, மயான்க் மார்கண்டே, ஷபாஜ் நதீம், முகமது சிராஜ், ஏவிஸ் கான், ஷர்துல் தாகூர்.

3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய-ஏ அணி

ஸ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), பிரித்வி ஷா, மயான்க் அகர்வால், சுப்மன் கில், ஹனுமா விகாரி, சிவம் தூபே, கிருஷ்ணப்பா கௌதம், விருத்திமான் சாகா (விக்கெட் கீப்பர்), கே எஸ் பரத்(விக்கெட் கீப்பர்), நவ்தீப் சைனி, மயான்க் மார்கண்டே, ஷபாஜ் நதீம், முகமது சிராஜ், ஏவிஸ் கான், ஷர்துல் தாகூர்.

Quick Links