ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவுக்கான ஒரு நாள் தொடர் நேற்று முடிவடைந்தது, மொத்தம் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட இத்தொடரை இந்தியா 2-1 என்ற விகிதத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது, அது மட்டுமில்லாமல் தோனி நடந்த மூன்று போட்டிகளிலும் அரைசதம் விளாசி கடைசி இரண்டு போட்டிகளிலும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார், அத்துடன் தொடர் நாயகன் விருதையும் வென்று தனக்கு எதிரான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இந்த தொடரில் நாம் கவனிக்க பட வேண்டிய முக்கியமான ஐந்து விசயங்களை பற்றி காண்போம்.
#ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் ஆவரேஜ் வெறும் 16.50:
இரண்டு அணியின் ஓப்பனிங் வீரர்களும் இத்தொடரில் பெரியதாக ரன் குவிக்க தவறியிருந்தனர், ஹாசல்வுட், மிட்சல் ஸ்டார்க், ஜாஸ்ப்ரிட் பூம்ரா போன்ற முக்கிய பவுலர்களுக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கபட்ட நிலையிலும் கூட இரண்டு அணி ஓப்பனிங் பேட்ச்மேன்களும் புது பந்தில் ரன் குவிக்க தடுமாறி இருந்தனர்.
புவனேஸ்வர்குமார் மற்றும் ரிச்சர்ட்சன் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்தனர். நான்கு ஓப்பனிங் வீரர்களில் ரோகித் சர்மாவை தவிர அனைவரது ஆவரேஜ்ஜும் 20 ரன்களுக்கும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலிய வீரர்களிம் அதிகபட்ச ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் 35 ரன் மட்டுமே. கேப்டன் ஆரோன் பின்ச்சின் பேட்டிங் மிகவும் மோசமாக உள்ள நிலையில் சான் மார்ஸ் அல்லது உஸ்மான் கவாஜா அவருக்கு மாற்றாக முயற்சி செய்யலாம் இந்திய தரப்பிலும் சிகார் தவான் மோசமான ஆட்டத்தை மட்டுமே வெளிபடுத்தினார்.
#ஆஸ்திரேலிய ஸ்பின்னர்களின் பின்னடைவு:
இத்தொடரில் சிறந்த பந்து வீச்சு நேற்றைய போட்டியில் சகால் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இத்தொடரில் இந்திய ஸ்பின்னர்கள் மொத்தம் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். அதில் ஆறு விக்கெட்டுகளை சகால் , ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்திய்ள்ளனர்.ஆஸ்திரேலியா சார்பாக ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தபட்டது. அதுவும் மேக்ஸ்வெல்லால் அம்பாத்தி ராயுடு அவுட் ஆக்கபட்டார். லயன் மற்றும் ஆடாம் ஜாம்பா இருந்தும் அவர்களால் விக்கெட் எடுக்கமுடியவில்ல.
#இந்தியாவின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள்.
இத்தொடரில் இந்தியா புவனேஸ்வர் குமார், முகமது சமி, கலீல் அகமது, முகமது சிராஜ் என அனைவரையும் உபயோகித்தும் புவனேஸ் மற்றும் சமி மட்டுமே சிறந்த பந்துவீச்சை வெளிபடுத்தினார். ஒரு நாள் போட்டியில் அறிமுக ஆட்டத்தை ஆடிய முகமது சிராஜ் மோசமான பவுலிங் கணக்கை பதிவு செய்தார். வழக்கம் போல புவனேஸ்வர் குமார் மட்டுமே சிறப்பாக பந்து வீசி தொடரில் அதிக விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தார்.
#கேப்டன் கூல் ஆவரேஜ் 193.
இத்தொடரின் நாயகன் மகேந்திரசிங் தோனியின் ஆவரேஜ் 193, நடந்த மூன்று போட்டிகளிலும் அரைசதம் கடந்தார் தோனி.
முதல் போட்டியில் மெதுவான துவக்கத்தை கொடுத்தாலும் அதில் எழுந்த விமர்சனங்களை தனது பாணியில் பினிஷ் செய்தார் கேப்டன் கூல். கடந்த ஆண்டு ஒரு அரைசதம் கூட அடிக்காத தோனி இந்த ஆண்டில் நடந்த மூன்று போட்டிகளிலும் அரைசதம் கடந்தார். இந்தியா தொடரை வெல்ல முக்கிய காரணமாகவும் அமைந்தார், தொடர் நாயகன் விருதையும் வென்றார். தோனி இதே பார்மை உலககோப்பையிலும் வெளிபடுத்த வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசை.
#சிறந்த பவுலர்களை கொண்ட இந்திய அணி:
தற்போதைய இந்திய அணியில் மூன்று வீர்ர்கள் 50 க்கும் மேறட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
பூம்ரா, குல்தீப் யாதவ், சகால் மற்றும் புவனேஸ்வர் குமார் போன்ற சிறந்த பவுலங் லைனை கொண்டுள்ளது இந்திய அணி. நேற்றைய போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார் சகால். அது போலவே குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் எதிரணிகளுக்கு பெரும் தலை வலியாக அமைந்தனர்.