இக்கால இளைஞர்களிடம் இந்தியாவின் தேசிய விளையாட்டு எதுவென கேட்டால் நூற்றில் 60 சதவீதம் பேர் கிரிக்கெட் என கூறுவார்கள். அந்தளவு இந்தியர்களின் மனதில் ஊறிப்போய் கிடக்கிறது இந்த கிரிக்கெட், இக்கட்டுரையில் இந்திய கிரிக்கெட் வரலாற்றின் சில சுவாரசியமான உண்மைகளை காண்போம்.
1.சர்வதேச அறிமுகம் - சச்சின் டெண்டுல்கர் :
இதுவரை நடந்த ஒரு நாள் போட்டிகள் வரலாற்றில் மொத்தம் 2086 வீரர்கள் களம் கண்டுள்ளனர், அதில் 2073 வீரர்கள் சச்சின் டெண்டுல்கரின் மொத்த ஒரு நாள் போட்டிக்கான ரன்களின் பாதியை கூட நெருங்க வில்லை.
பாகிஸ்தான் அணியில் ஆடிய சச்சின் டெண்டுல்கர். ஆம் நீங்கள் படித்தது உண்மைதான். ஜனவரி 20 ஆம் தேதி 1987 -ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி விளையாடும் ஒரு நாள் பயிற்சி ஆட்டம் மும்பை ப்ராபோன் ஸ்டேடியத்தில் நடைபெற்றது, 40 ஓவர் கொண்ட ஒரு நாள் பயிற்சி ஆட்டம் , மதிய உணவு இடைவெளியில் இருந்து திரும்ப இரு பாகிஸ்தான் அணிவீரர்கள் தாமதமானதால் மைதானத்தில் இருந்த இரு சிறுவர்களை பீல்டிங் செய்ய அழைத்துள்ளார் பாகிஸ்தானின் கேப்டன், அவர் அழைத்த இரு சிறுவர்களில் ஒருவர் உலக கிரிக்கெட் வரலாற்றையே மாற்றி அமைக்க போகும் ஜாம்பவான் என அவர் அறிந்திருக்க வாய்ப்பில்லைதான் ஆம் அதில் ஒரு சிறுவர் 13 வயதே நிறைவடைந்த சச்சின் டெண்டுல்கர்., இருப்பினும் அந்த ஆட்டத்தில் கபில்தேவ் கொடுத்த கேட்சை சச்சின் தவறவிட்டார் என்பது குறிப்பிடதக்கது. அதுவே சர்வதேச போட்டிகளில் அவருக்கு முதல் அறிமுகம்.
2.சர்வதேச அறிமுகம் - ஷிகர் தவான் :
அறிமுக போட்டியில் அதிவேக சதம் அடித்து உலகசாதனை புரிந்தவர் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான். 2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் டெஸ்ட் ஆட்டத்தில் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்குக்கு மாற்றுதலாக இந்தியாவின் பேட்டிங்கை தொடங்குகிறார் இடது கை ஆட்டக்காரரான ஷிகர் தவான், களமிறங்கிய முதல் நாளிலேயே வெறும் 85 பந்துகளில் சதம் விளாசி உலகுக்கு தன்னை அறிமுகம் செய்கிறார். ஆம் இதற்கு முன்பு மேற்கு இந்திய தீவுகளை சேர்ந்த ட்வைன் ஸ்மித் 2004 ல் 93 பந்துகளில் அடித்த சதத்தை முறியடித்தார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 168 பந்துகளில் 185 ரன்கள் குவித்திருந்தார்.
3.மகேந்திரசிங் தோனி :
மகேந்திரசிங் தோனி 2005ல் இலங்கைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 183 ரன்கள் குவித்திருந்தார் இன்றுவரை எந்த விக்கெட் கீப்பர்களாலும் முறியடிக்க பட முடியாத சாதனைகளில் இதுவும் ஒன்று. அதுவே தோனியின் ஒருநாள் போட்டிகளின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் 0.8 விநாடிகளில் ஸ்டம்பிங் செய்து தனது சொந்த சாதனையை முறியடித்தார் என்பது குறிப்பிடதக்கது
4.இந்தியாவின் சுவர் -
கிரிக்கெட்டின் சுவர் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக பெங்களுர் சின்னசாமி மைதானத்தில் சுவர் ஒன்று எழுப்பபட்டுள்ளது, அந்த சுவற்றில் சரியாக 13,288 செங்கல்கள் உபயோகிக்கபட்டுள்ளன. 13,288 என்பது அவரின் அடித்த மொத்த டெஸ்ட் ரன்கள்.