#4.ரிஷப் பண்ட்டின் பயமறியா பேட்டிங் திறன்
இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி வெளிநாட்டு தொடர்களில் பேட்டிங்கில் அவ்வளவாக ஜொலிப்பதில்லை. ஆனால் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் ஃபன்ட் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
ரிஷப் பண்ட் மட்டுமே ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் ஆவார். ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பந்துவீச்சை கணித்து சிறப்பாக விளையாடியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. ஆனால் இருப்பினும் உலகக் கோப்பை திட்டத்தில் இவர் இருக்கிறார் என இந்திய தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
தோனியின் சகாப்தத்திற்கு பிறகு ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக இருப்பார் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. ரிஷப் பண்ட் கண்டிப்பாக தோனிக்குப் பிறகு அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பாக ஆட்டத்திறனை வெளிபடுத்துவார் என்பது சந்தேகமில்லா உண்மையாகும். கடினமான சமயங்களில் இவரது பேட்டிங் இந்திய அணிக்கு வலிமையாக அமைகிறது.
இவர் இதுவரை டெஸ்ட் போட்டிகளில் இரண்டு சதங்களை விளாசியுள்ளார். இரண்டு சதங்களுமே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என வெளிநாட்டு மண்ணில் தான் அடித்துள்ளார என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பேட்டிங் அதிரடியாகவே உள்ளது. எந்த சமயத்தில் எவ்வாறு பேட்டிங் செய்ய வேண்டுமென சரியாக தீர்மாணித்து அதிரடியாக விளையாடும் திறமை உடையவர் ரிஷப் பண்ட்.. 2019 உலகக் கோப்பையில் இந்திய அணியில் இவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.