#3.ஒருநாள் கிரிக்கெட்டில் வலிமையான மிடில் ஆர்டர்
இந்திய ஒருநாள் அணியில் மிகவும் நீண்ட காலமாக இருந்து வந்த பெரிய குறை இந்திய அணியின் மோசமான மிடில் ஆர்டர் பேட்டிங் தான்.அந்தக் கவலை தற்போது தற்போது தீர்ந்துள்ளது. இந்திய மிடில் ஆர்டர் வீரர்களான தோனி , ராயுடு , கேதார் ஜாதவ் கடந்த இரு வெளிநாட்டு தொடர்களிலும் சிறப்பாக தங்களது ஆட்டத்திறனை வெளிபடுத்தியுள்ளனர்.
குறிப்பாக தோனியின் சிறப்பான ஆட்டத்திறன் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரை இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தது. ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தோனி ஆட்டநாயகன் விருதினை வென்றார். இவரது சிறப்பான பேட்டிங்கால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பிரச்சினை அறவே நீங்கியது. நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் ராயுடு சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவியுள்ளார். அத்தொடரில் இந்திய அணி சார்பாக அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.
கேதர் ஜாதவின் ஆல்-ரவுண்டர் திரன் இந்திய அணிக்கு மிகுந்த பலத்தை சேர்க்கிறது. பேட்டிங்கிலும் சரி பந்துவீச்சிலும் சரி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் கேதார் ஜாதவ். சில முக்கியமான பார்ட்னர் ஷிப்களை உடைக்க கேதார் ஜாதவ் இந்திய அணிக்கு ஒரு துருப்புச் சீட்டாக உள்ளார். தினேஷ் கார்த்திக் ஆட்டத்தை முடித்து வைக்கும் ஒரு நல்ல ஃபினிஷராக இந்திய அணியில் செயல்படுகிறார்.
இந்திய அணி தற்போது சிறந்த ஆட்டத்திறனுடன் ஒருநாள் கிரிக்கெட்டில் திகழ்கிறது. பெரும்பாலும் தற்போது உள்ள இந்திய அணியே 2019 உலகக் கோப்பைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.