#4.இந்திய பௌலர்களின் சிறப்பான பந்து வீச்சு
இந்த இரு வெளிநாட்டு தொடர்களிலும் மற்றொரு சிறப்பான நிகழ்வு என்னவென்றால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சு.ஆஸ்திரேலிய டெஸ்ட்டில் இந்திய அணியின் மூவேந்தர்கள் முகமது ஷமி, பூம்ரா , இஷாந்த் சர்மா போன்றோர் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்திய டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்களான ஷமி, பூம்ரா , இஷாந்த் ஷர்மா ஆகியோர் ஆஸ்திரேலியாவில் இந்திய அணியின் வரலாற்று டெஸ்ட் வெற்றிக்கு காரணமாக இருந்தனர். இந்த பௌலிங் குழுதான் உலகின் சிறந்த பௌலிங் குழுவாக தற்போது விளங்குகிறது. எந்த வகையான பேட்டிங் ஆர்டராக இருந்தாலும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறமை வாய்ந்தவர்களாக மூவேந்தர்கள் விளங்குகிறனர்.
ஃபிட்னஸ் மற்றும் ஆட்டத்திறனில் திணறிக் கொண்டிருந்த புவனேஸ்வர் குமார் இந்த இரு வெளிநாட்டு தொடர்களிலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளனர். பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்களில் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டு தனது பழைய ஆட்டத்திறனை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார். நியூசிலாந்து தொடரில் புவனேஸ்வர் குமார் , முகமது ஷமி-யுடன் இனைந்து சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு உள்ளார். இந்திய அணியின் 4-1 என்ற வெற்றிக்கு காரணமாகவும் அமைந்துள்ளார்.
கடந்த சில வருடங்களாகவே இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆட்டத்திறனை சிறப்பாக வெளிபடுத்தி வருகின்றனர். இந்த இரு தொடர்களிலும் தங்களது பணியினை செம்மையாக செய்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்துள்ளனர் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா , குல்தீப் யாதவ் மற்றும் சஹால்.