#1.இந்திய தொடக்கம் விராட் கோலியை நம்பி இல்லை
இரு வெளிநாட்டு தொடர்களிலும் இந்திய அணிக்கு கிடைத்த மிகப்பெரிய நன்மை , அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் அற்புதமான தொடக்க ஆட்டக்காரர்கள் தான். இந்திய அணி கோலியை நம்பியே இல்லை என இந்த இரு தொடர்களிலும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் தங்களை நிருபித்து உள்ளனர்.
புஜாராவை வசைபாடியோர்களின் வாயை அடைக்கும் விதமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து என இரு நாடுகளிலும் இந்திய அணியின் வெற்றிக்கு கோலி மட்டும் காரணமல்ல. அணியின் முழு ஒத்துழைப்பே இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாகும்.
2014ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி சிறப்பாக விளையாடியதை போலவே 2018-19 ல் நடந்த டெஸ்ட் தொடரில் புஜாரா விளையாடியுள்ளார். தனது முழு ஆட்டத்திறனையும் வெளிபடுத்தி டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்தவர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் தொடர் ஆட்டநாயகன் விருதினையும் வென்று இந்திய வரலாற்று டெஸ்ட் தொடர் வெற்றியில் சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு தொடர்களுமே இந்திய அணியின் பேட்டிங் வலிமையை நிருபிக்க கிடைத்த ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது .