2019 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தாமதமாக தொடங்கினாலும் வெற்றியுடன் தொடங்கியது. இந்திய அணி தனது முதல் போட்டியை இரண்டு முறை தோல்வி பெற்ற தென்னாப்பிரிக்கா அணியுடம் மோதியது. இந்தப் போட்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டிக்கு பின் இந்தியா அணியின் மன உறுதி உயர்ந்தள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு முன்னாள் தென் ஆப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸ் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலினை பாராட்டியுள்ளார். உலகக் கோப்பையின் உண்மையான போட்டியாளராக இந்திய அணி இருப்பதாக ஜாக் காலிஸ் கூறினார். அதுமட்டுமின்றி, இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி உலகத்தரம் வாய்ந்த அணியாக இருக்கிறது என்று புகழ்ந்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா அணி இந்த உலகக்கோப்பையில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியுற்ற பின்னர், இனி வரும் போட்டிகள் அனைத்தும் நாக் அவுட் போன்றதாகும் என்று முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் ஜாக் காலிஸ் கூறியுள்ளார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களை விக்கெட் எடுத்து அணிக்கு சிக்கலை ஏற்படுத்தினார். இதன் பின் யூசிவெந்திர ஷாகல் நான்கு விக்கெட்களை பெற்றார் இதன் பின் தென்னாப்பிரிக்கா அணியின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. இவர்கள் இருவரும் இந்திய அணியின் தூணாக இருக்கின்றனர். ஹிட் மேன் என்று அழைக்கப்படும் ரோதித் சர்மா இந்த ஆட்டத்தில் சதம் அடித்து இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார் என்று கூறினார் காலிஸ்.
காலிஸ், இந்திய அணியிடம் தோற்பதற்கு முன்பு தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்து மற்றும் பங்களாதேஷ் அணியுடன் தோல்வியை பெற்றதாக கூறினார். இதனால் தென் ஆப்பிரிக்கர்கள் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் தங்களை வைத்ததாக கூறினார். ஏனென்றால் 9 லீக் போட்டியில் 5 லீக் போட்டியில் வெற்றி பெருவது அவசியமாகும் ஆனால் ஏற்கனவே 3 போட்டியில் தோல்வி அடைந்ததால் இனி வரும் அனைத்து போட்டிகளும் நாக் அவுட் போட்டியாக இருக்குகிறது.
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுடன் தோல்வி அடைந்தது குறித்து வாங்க கவலைப்படவில்லை. ஆனால் பங்களாதேஷ் அணியுடன் தோல்வி அடைந்தது தான் கவலையாக இருக்கிறது என்றார் காலிஸ்.
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து மிகப்பெரிய தவறு செய்ததாக கூறினார். இப்போது அனைத்து வீரர்களும் தங்கள் தவறுகளை மேம்படுத்தி வருவதாக கூறியுள்ளார்..
தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்தபின்னர், ஒவ்வொரு ஆட்டமும் நாக் அவுட் போட்டியாக இருக்கும் என்று மீண்டும் மீண்டும் அவர் எச்சரித்தார். தென்னாப்பிரிக்கா அணி இழந்த நம்பிக்கையை திரும்ப கொண்டு வர வேண்டும் என்றார். வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தானுடனான அடுத்த இரு போட்டிகள் உள்ளன. அணியின் நிலைமையை இந்த போட்டிகளை வென்றதன் மூலம் மேம்படுத்தப்படலாம் என்றார். இதன் பின் தென்னாப்பிரிக்கா அணி நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் தாளத்தை அடைய வேண்டும் என்று கூறியுள்ளார். தென் ஆப்பிரிக்க கேப்டன் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் சிறப்பான கேபடன். இருப்பினும், முழு பொறுப்பையும் கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் தோள்களில் வைக்க கூடாது. அனைத்து வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் வெற்றியை அடைய முடியும் என்றார் முன்னாள் தென்னாப்பிரிக்கா வீரர் காலிஸ்.