நடந்து என்ன ?
50 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய அணி சொந்த மண்ணில் மிகவும் வலிமை வாய்ந்ததாக திகழ்கிறது என ஆஸ்திரேலிய ஓடிஐ அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா ?
ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதன் முதல் ஒருநாள் போட்டி மார்ச் 2 அன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளது. இந்திய அணி ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் 2வது இடத்தையும் , ஆஸ்திரேலிய அணி 6வது இடத்தையும் வகிக்கிறது.
கதைக் கரு
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. இத்தொடரில் எம்.எஸ்.தோனி தொடர்ந்து 3 அரைசதங்களை விளாசி ஆட்டநாயகன் விருதினை வென்றார். தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை பலி தீர்க்கும் வகையில் ஒருநாள் போட்டிகளில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் மிட்செல் ஸ்டார்க் மற்றும் ஜோஸ் ஹசில்வுட் ஆகியோருக்கு இத்தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தற்போதைய ஆஸ்திரேலிய அணியில் நாதன் கூல்டர் நில், பேட் கமின்ஸ், ஜே ரிச்சர்ட்சன் போன்ற திறமை வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பிடித்து உள்ளனர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜே ரிச்சர்ட்சன் மிகவும் சிறப்பாக பந்துவீச்சை மேற்கொண்டார். தற்போதைய ஆஸ்திரேலிய ஓடிஐ அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் கடந்த வாரத்தில் முடிவடைந்த பிக்பாஸ் தொடரில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வழிநடத்தி சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். எனவே அதே கேப்டன் ஷிப் நுட்பங்களை இந்திய தொடரிலும் ஆரோன் ஃபின்ச் பயன்படுத்தி வெற்றிகளை குவிப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ஆரோன் ஃபின்ச் தற்போதைய இந்திய ஓடிஐ அணியை மிகவும் அதிகமாக புகழ்ந்து தள்ளியுள்ளார். இவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது : "எந்த ஒரு அணியும் இந்தியாவில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் பங்கேற்கும் முன் நன்கு மிகுந்த பயிற்சியுடனும் , அதிக நம்பிக்கையுடனுமே வர வேண்டும். உங்களது நம்பிக்கையையோ அல்லது ஆற்றலையோ சிறிது இழந்துவிட்டால் கூட இந்திய அணி உங்களை எளிதாக வீழ்த்தி விடும். இந்திய அணி அதன் சொந்த மண்ணில் சிறந்த ஓடிஐ அணியாக திகழ்கிறது என நான் நினைக்கிறேன். எனவே இந்திய தொடருக்கு முன் முழு நம்பிக்கையுடனும் , ஆட்டத்தின் முழு திட்டத்தையும் சரியாக வகுத்தால் மட்டுமே இந்திய அணியை வீழ்த்த வாய்ப்புள்ளது".
அடுத்தது என்ன ?
50 ஓவர் கிரிக்கெட்டிற்கு முன்பு இரு அணிகளும் மோதும் இரு டி20 போட்டிகள் கொண்ட தொடர் விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 24 அன்று தொடங்க உள்ளது. ஆஸ்திரேலிய தொடர் , இந்திய அணிக்கு 2019 உலகக் கோப்பைக்கு கடைசி தொடராகும். எனவே இந்திய அணி தனது முழு ஆட்டத்திறனை வெளிபடுத்தி தனது வெற்றி பாதையை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.