உலகில் மிகப் பிரபலமான டெஸ்ட் தொடராகக் கருதப்படுவது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்குபெறும் ஆஸஷ் தொடர். ஆனால் அதைவிடப் பெரியது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பங்குபெறும் டெஸ்ட் தொடர் என்று ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார்.
இந்த வாரம் முன்னதாக, கிரிக்கெட் கவர்னின்ங் கவுன்சில், பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கேட்ட 70 மில்லியன் அமெரிக்க டாலர் இழப்பீட்டுத் தொகையை நிராகரித்தது. இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்தான ஒப்பந்தம் சட்டப்பூர்வமான கட்டுப்பாட்டு உடன்படிக்கை அல்ல என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, இந்திய தொலைகட்சிகளுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது “இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடர் மிகக் கடுமையான மற்றும் பரபரப்பான போட்டியாகக் கருதப்படுகிறது ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானுடனான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், ஆஷஸ் தொடரைவிட பெரியதாக இருக்கும்.” மேலும் அவர் “விராட் கோஹ்லி தனது விருப்பமான வீரர்களில் ஒருவர். ஆனால் அவர் ஒரு கேப்டனாக முன்னேற வேண்டும்.” என்று கூறினார்.
"முதலில், இந்தியா-பாகிஸ்தான் தொடர் நடைபெற வேண்டும். இந்தியா-பாகிஸ்தான் போட்டிகள் சூடான பல பரபரப்புகளை உள்ளடக்கி இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டை நீங்கள் காப்பாற்ற விரும்பினால், இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் விளையாட வேண்டும். இது வித்தியாசமான கலையையும் மற்றும் அதிர்வையும் கொண்டிருக்கும். வீரர்கள் அழுத்தத்தின் கீழ் விளையாடிம் கலையைக் கற்றுக்கொள்வார்கள்." என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா கூறினார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியைத் தோற்கடித்தது. மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டி20 தொடரில் விக்கெட் கீப்பர் தோனி இடம் பெறவில்லை. இருப்பினும், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி, “2019 ஐசிசி உலகக் கோப்பையில் வெற்றிபெற இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் ஆலோசகர் தேவைப்படும். எனவே தோனி கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும்” என்று கருத்து கூறியுள்ளார்.
2008-ஆம் ஆண்டு மும்பையில் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பாகிஸ்தானுடன் இருதரப்பு கிரிக்கெட் உறவுகளை முறித்துக் கொண்டது. 2013-ல் பாகிஸ்தான் உடன் மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டி20 க்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆனால் அதற்கு பின்னர் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தொடர்கள் நடைபெறவில்லை.
இதுவரை நடைபெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டிகளின் வெற்றி முடிவுகளை இங்கு காண்போம்.
இந்தியா vs. பாகிஸ்தான் - சர்வதேச ட்வென்டி 20
மொத்தம்: 8
இந்தியா வெற்றி பெற்றது: 6
பாகிஸ்தான் வெற்றி பெற்றது: 1
நோ ரிசல்ட்: 1
இந்தியா vs. பாகிஸ்தான் - சர்வதேச ஒரு நாள் போட்டிகள்
மொத்தம்: 131
இந்தியா வெற்றி பெற்றது: 56
பாகிஸ்தான் வெற்றி பெற்றது: 73
நோ ரிசல்ட்: 4
இந்தியா vs. பாகிஸ்தான் – டெஸ்ட் போட்டிகள்
மொத்தம்: 59
இந்தியா வெற்றி பெற்றது: 9
பாகிஸ்தான் வெற்றி பெற்றது: 12
டிரா: 38