இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் ஜனவரி 3 அன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது.
அடிலெய்டு டெஸ்டில் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணி , பெர்த் டெஸ்டில் மோசமான தோல்வியை தழுவியது . அதன்பின் மெல்போர்ன் டெஸ்ட்டில் மீண்டும் தனது அதிரடியை வெளிபடுத்தி வெற்றி பெற்றது இந்திய அணி . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என முன்னிலையில் வகிக்கிறது . சிட்னி டெஸ்டில் அதிரடியாக விளையாடி தொடரை கைப்பற்றி புதிய வரலாற்றினை படைக்கும் நோக்கில் உள்ளது இந்திய அணி . ஏற்கனவே இந்திய அணி 2-1 என்று தொடரில் முன்னிலையில் இருப்பதன் மூலம் கவாஸ்கன் டிராபி தொடரை இழப்பதை தடுத்துள்ளது.
சிட்னியில் நடைபெறவுள்ள நான்காவது மற்றும் தொடரை தீர்மானிக்கும் டெஸ்ட் போட்டியில் , மெல்போர்ன் டெஸ்ட் XIஐ எடுத்துச் செல்லும் நோக்கில் விராட் கோலி திட்டமிட்டுருந்தார். ஆனால் ரோகித் சர்மா இந்தியா செல்லும் சூழ்நிலை ஏற்பட்டதால் அவருக்கு மாற்று வீரர் தேவைப்படுகிறார் . ரோகித் சர்மா-வின் மனைவி ரித்திகா-விற்கு பெண் குழந்தை பிறந்துள்ளதால் இந்தியா செல்லும் சூழ்நிலை ஏற்பட்டது . இதனால் ரோகித் சர்மா-விற்கு இந்தியா செல்ல பிசிசிஐ அனுமதி அளித்தது . அவர் ஜனவரி 7ஆம் தேதி அணியுடன் இணைவார் எனவும் , ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பார் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது .
இதனால் ரோகித் சர்மா இடத்தை நிரப்பும் நிலையில் இந்திய அணி உள்ளது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினிற்கு இன்று காலையில் உடற்தகுதி தேர்வு நட்த்தப் பட்டது, ஆனால் அதில் அவர் தோல்வியடைந்து ரூல்ட்-அவுட் ஆகியுள்ளார் . ஆனால் இன்று அற்விக்கப்பட்டுள்ள 13 பேர் கொண்ட இந்திய அணியில் அஸ்வின் பெயர் இடம்பெற்றுள்ளது , அத்துடன் ஆட்டம் ஆரம்பிக்கும் முன் காலை வேளையில் அஸ்வினின் உடற்தகுதி சரியாக இருக்கிறதா என சோதித்து அணியில் சேர்க்கப்படுவதற்கான முடிவினை இந்திய அணி அறிவிக்கும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆச்சரியமூட்டும் வகையில் கே.எல்.ராகுல் மீண்டும் 13பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார் . அத்துடன் குல்தீப் யாதவ் மற்றும் உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளனர் . மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடிய முதுபெரும் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா-விற்கு சிட்னி டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டு இறக்கப்படலாம் எனவும் , ஆரோன் ஃபின்ச்-ற்கு பதிலாக மாற்று ஆட்டக்காரர் தேர்வு செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப ஆடும் XI தேர்வு செய்யப்படும் எனவும் ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிட்னி டெஸ்டிற்கான 13 பேர் கொண்ட இந்திய அணி : விராட் கோலி ( கேப்டன் ) , ரகானே ( துனைக் கேப்டன் ), மயான்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஹனுமா விகாரி, புஜாரா, ரிஷப் பன்ட் ( விக்கெட் கீப்பர் ) , ரவிச்சந்திரன் அஸ்வின் , ரவீந்திர ஜடேஜா , குல்தீப் யாதவ் , உமேஷ் யாதவ் , முகமது ஷமி , ஜாஸ்பிரிட் பூம்ரா .