1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே?

1996 Indian World Cup Team Sachin Tendulkar
1996 Indian World Cup Team Sachin Tendulkar

மிகப்பெரிய தொடரான உலகக்கோப்பை தொடரின் 6வது சீசனை இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் அணிகள் 1996ல் நடத்தின. 12 அணிகள் மொத்தமாக பங்கேற்ற இந்த தொடரில் அரையிறுதி, இறுதிப் போட்டி என 37 போட்டிகள் நடந்தன‌. இந்த உலகக்கோப்பை தொடரில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு குழுவிற்கு 6 அணிகள் வீதம் இடம்பெற்றிருந்தது. முதல் 4 இடங்களை லீக் சுற்று முடிவில் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதி பெறும்.

மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பாதுகாப்பின்மையால் இலங்கை சென்று விளையாட தயங்கின. இதனால் இலங்கை காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்தியா-பாகிஸ்தான் காலிறுதியில் மோதின. அதில் இந்தியா வென்று அரையிறுதியில் இலங்கையை எதிர்கொண்டது. ஆனால் அரையிறுதியில் மோசமான தோல்வியை தழுவி இந்தியா வெளியேறிய காரணத்தால் இந்திய அணியின் உலகக்கோப்பை கனவு அப்போது நிறைவேறவில்லை.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள நேரிட்டது. அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் விதமாக உலகக்கோப்பையை வெல்லும் என்று நினைத்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இலங்கை கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்திய அணி அரையிறுதியில் தோல்வியை தழுவியிருந்தாலும் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை எடுத்தவர்கள் முறையே, சச்சின் டெண்டுல்கர் மற்றும் அணில் கும்ளே ஆவார்கள்.

அரையிறுதியில் இந்திய வீரர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி நாம் இங்கு காண்போம்.

#1 சச்சின் டெண்டுல்கர் மற்றும் நவ்ஜோட் சிங் சித்து

Sachin Tendulkar
Sachin Tendulkar

1992 உலகக்கோப்பை தொடரில் சிறப்பான அறிமுக வீரராக களமிறங்கிய சச்சின் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டம் 1996 உலகக்கோப்பை தொடரில் வெளிபட்டது. இந்த உலகக் கோப்பை தொடரின் கென்யாவிற்கு எதிரான ஆரம்ப போட்டியில் சதமும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அரைசதமும் விளாசி இந்திய அணியை காலிறுதிக்கு அழைத்து சென்றார் சச்சின் டெண்டுல்கர். இலங்கைக்கு எதிரான அரையிறுதிப் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் 65 ரன்களை குவித்தார். ஆனால் மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி வெளியேறியது.

2013ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சச்சின் அதன் பின் வெவ்வேறு பதவிகளில் இருந்தார். இவர் கிரிக்கெட் அறிவுரை கமிட்டியின் உறுப்பினராக உள்ளார்‌. அத்துடன் "மும்பை இந்தியன்ஸ்" அணியின் அடையாளமாக திகழ்கிறார்.

மறுமுனையில் நவ்ஜோட் சிங் சித்து 1996 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு திரும்பினார். இவர் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் பாகிஸ்தான், ஜீம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிராக மேட்ச் வின்னிங் ரன்களை விளாசினார். இவரது கிரிக்கெட் வாழ்விற்கு பிறகு வர்னனையாளராகவும், நகைச்சுவை நிகழ்ச்சிகளின் நடுவராகவும் இருந்து வந்தார். இதைத்தவிர இவர் முழு நேர அரசியல்வாதியாக வலம் வந்தார். பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சராக உள்ளார்.

#2 சஞ்சய் மஜ்ரேகர் மற்றும் முகமது அசாருதீன்

Mohammad Azharuddin
Mohammad Azharuddin

சஞ்சய் மஜ்ரேகர் 1987 முதல் 1996க்கும் இடைபட்ட காலத்தில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 2000க்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். அத்துடன் 1992 மற்றும் 1996 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடியுள்ளார். 1996 உலகக்கோப்பை தொடரில் 5 போட்டிகளில் பங்கேற்ற இவர் அதிக விருவிருப்புடன் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசினார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் வர்ணணையாளராக திகழ்ந்து வருகிறார்.

முகமது அசாரூதின் இந்திய அணிக்காக 4 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றார். 25 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்ற இவர் 8 அரைசதங்களுடன் 826 ரன்களை குவித்தார். 1996 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு அரையிறுதிக்கு தகுதி பெறச் செய்தார்‌. அந்த சமயத்தில் இவர் மோசமான ஆட்டத்திறனில் இருந்திருந்தாலும், இவரது கேப்டன்ஷீப் கை கொடுத்தது. சூதாட்டப் புகாரில் சிக்கிய காரணத்தால் இவரது கிரிக்கெட் வாழ்க்கை மோசமாக முடிவுக்கு வந்தது. இதிலிருந்து இவர் மீண்டு வர 12 வருடங்கள் ஆனது. தற்போது இந்திய காங்கிரஸ் கட்சியில் அரசியல் வாதியாக உள்ளார்.

#3 வினோத் காம்ளி மற்றும் ஜவஹால் ஶ்ரீ நாத்

Vinod Kambli and Javagal Srinath
Vinod Kambli and Javagal Srinath

1996 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இலங்கை வெற்றி பெற்ற போது வினாத் காம்ளி அதிக பயத்துடன் ஈடன் கார்டன் மைதானத்தின் ஓய்வறையை நோக்கி நடந்து வந்ததை எந்த ரசிகர்களும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இவர் ஒரு இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் அதிரடி ஆட்டக்காரர். ஒரு சிறந்த அதிரடி ஆட்டக்காரராக எதிர்காலத்தில் திகழ்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தனது இளம் வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். இவர் 1992 மற்றும் 1996 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று தனது பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்தார். தனது கடைசி ஒருநாள் போட்டியை 2000 ஆம் ஆண்டு விளையாடினார். அதன் பின்னர் கிரிக்கெட் வள்ளுநராகவும், வெவ்வேறு தொலைக்காட்சி சேனலில் வர்ணணையாளராகவும் இருந்து வந்தார்.1

1980களில் இந்திய அணியின் பௌலிங்கை கபீல்தேவ் நிர்வகித்தது போல் 1990லிருந்து 2000 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை ஜவஹால் ஶ்ரீ நாத் இந்திய பௌலிங்கை நிர்வகித்தார். இவரது சிறப்பான கிரிக்கெட் வாழ்வில் 551 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இவர் இருந்தார்‌. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வெவ்வேறு பதவிகளில் பதவி வகித்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆட்ட நடுவராகவும், கர்நாடக கிரிக்கெட் அசோசியேசனின் செயல் தலைவராகவும் உள்ளார்.

#4 அஜய் ஜடேஜா, நயன் மோன்ஜீயா மற்றும் ஆஸீஸ் கப்பூர்

Ajay Jadeja
Ajay Jadeja

அஜய் ஜடேஜா ஒரு சிறந்த ஃபீல்டர் மற்றும் இந்திய அணியின் ஃபினிஷராகவும் வலம் வந்தார். 3 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த இவர் 18 போட்டிகளில் பங்கேற்று 500 ரன்களை குவித்தார். இவரது மறக்க முடியாத இன்னிங்ஸ் என்றால், அது 1996 உலகக்கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிரான ஆட்டத்தில் 25 பந்துகளுக்கு 45 ரன்களை குவித்தார். இது பாகிஸ்தானின் இலக்கை எட்ட இந்தியாவிற்கு உறுதுணையாக இருந்தது. இவரது புகழை சூதாட்டம் முழுமையாக கெடுத்தது. அத்துடன் கிரிக்கெட் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டு வந்தது. தற்போது வரை அதிகப்படியான திரைப்படங்களை நடித்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக இருந்து வருகிறார். தற்காலத்தில் கிரிக்கெட் வள்ளுநர் மற்றும் வர்ணணையாளராகவும் உள்ளார்.

கீரன் மோர் காயம் காரணமாக விலகிய காரணத்தால் நய்ன மோன்ஜீயா விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்டார்‌. இந்திய அணியில் தனது இடத்தை உறுதியாக்க இவர் இரு வருடங்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஒருநாள் கிரிக்கெட்டில் 110 கேட்ச் மற்றும் 45 ஸ்டம்பிங் ஆகியவற்றை செய்து அசத்தியுள்ளார் நயன் மோன்ஜீயா. ஸ்டம்பிங் செய்வதில் வல்லவராக இருந்தார். அத்துடன் அணியின் ஒரு முக்கிய பேட்ஸ்மேனாக இருந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக வலம் வந்தார். அத்துடன் விசாக் விக்டர் என்ற உள்ளூர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பங் பயிற்சியாளராக இருந்து வந்தார்.

1996 உலகக்கோப்பை தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற ஆஸீஸ் கபூர் வலதுகை சுழற்பந்து வீச்சாளர். அதிகப்படியான வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள இவர் தவறியதால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்று வந்த இவர் பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை.

#5 அணில் கும்ளே மற்றும் வெங்கடேஷ் பிரசாத்

Anil Kumble
Anil Kumble

1990ல் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த அணில் கும்ளே தனது முதல் உலகக்கோப்பை தொடரை 1996ல் விளையாடினார். வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். 18 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 22.84 சராசரியுடன் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் ஆல்-டைம் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் நிர்வாக இயக்குநராக வெவ்வேறு உள்ளூர் அணிகளில் திகழ்ந்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மூன்றாவது முறை நியமிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் டாப் 5 இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி என்று பார்த்தால் 1996 உலகக்கோப்பையின் காலிறுதிப் போட்டியை தான் முதலில் தேர்வு செய்வார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இப்போட்டியில் அமீர் சொஹாலியால் நகைப்பிற்கு உள்ளான வெங்கடேஷ் பிரசாந்த் தரமான ஆட்டத்தை வெளிகொண்டு வந்தார்.இவரது வெவ்வேறு கோண பந்துவீச்சு பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்தது‌. இரு உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள இவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்விற்கு பின்னர் இந்திய U19 அணி மற்றும் இந்திய அணி ஆகியவற்றிற்கு பயிற்சியாளராக இருந்தார். அத்துடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் பௌலிங் பயிற்சியாளராகவும் வலம் வந்தார். இவர் தற்போது கிரிக்கெட் வர்ணணையாளராக உள்ளார்‌.

Quick Links

App download animated image Get the free App now