#3 வினோத் காம்ளி மற்றும் ஜவஹால் ஶ்ரீ நாத்
![Vinod Kambli and Javagal Srinath](https://statico.sportskeeda.com/editor/2019/06/2e288-15610933487934-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/06/2e288-15610933487934-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/06/2e288-15610933487934-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/06/2e288-15610933487934-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/06/2e288-15610933487934-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/06/2e288-15610933487934-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/06/2e288-15610933487934-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/06/2e288-15610933487934-800.jpg 1920w)
1996 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இலங்கை வெற்றி பெற்ற போது வினாத் காம்ளி அதிக பயத்துடன் ஈடன் கார்டன் மைதானத்தின் ஓய்வறையை நோக்கி நடந்து வந்ததை எந்த ரசிகர்களும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இவர் ஒரு இடதுகை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் அதிரடி ஆட்டக்காரர். ஒரு சிறந்த அதிரடி ஆட்டக்காரராக எதிர்காலத்தில் திகழ்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தனது இளம் வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார். இவர் 1992 மற்றும் 1996 உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்று தனது பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்தார். தனது கடைசி ஒருநாள் போட்டியை 2000 ஆம் ஆண்டு விளையாடினார். அதன் பின்னர் கிரிக்கெட் வள்ளுநராகவும், வெவ்வேறு தொலைக்காட்சி சேனலில் வர்ணணையாளராகவும் இருந்து வந்தார்.1
1980களில் இந்திய அணியின் பௌலிங்கை கபீல்தேவ் நிர்வகித்தது போல் 1990லிருந்து 2000 ஆம் ஆண்டின் ஆரம்பம் வரை ஜவஹால் ஶ்ரீ நாத் இந்திய பௌலிங்கை நிர்வகித்தார். இவரது சிறப்பான கிரிக்கெட் வாழ்வில் 551 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4 உலகக்கோப்பை தொடர்களில் இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இவர் இருந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வெவ்வேறு பதவிகளில் பதவி வகித்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஆட்ட நடுவராகவும், கர்நாடக கிரிக்கெட் அசோசியேசனின் செயல் தலைவராகவும் உள்ளார்.