#4 அஜய் ஜடேஜா, நயன் மோன்ஜீயா மற்றும் ஆஸீஸ் கப்பூர்
அஜய் ஜடேஜா ஒரு சிறந்த ஃபீல்டர் மற்றும் இந்திய அணியின் ஃபினிஷராகவும் வலம் வந்தார். 3 உலகக்கோப்பை தொடரில் இடம்பெற்றிருந்த இவர் 18 போட்டிகளில் பங்கேற்று 500 ரன்களை குவித்தார். இவரது மறக்க முடியாத இன்னிங்ஸ் என்றால், அது 1996 உலகக்கோப்பையில் பாகிஸ்தானிற்கு எதிரான ஆட்டத்தில் 25 பந்துகளுக்கு 45 ரன்களை குவித்தார். இது பாகிஸ்தானின் இலக்கை எட்ட இந்தியாவிற்கு உறுதுணையாக இருந்தது. இவரது புகழை சூதாட்டம் முழுமையாக கெடுத்தது. அத்துடன் கிரிக்கெட் வாழ்க்கையையும் முடிவுக்கு கொண்டு வந்தது. தற்போது வரை அதிகப்படியான திரைப்படங்களை நடித்துள்ளார். அத்துடன் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக இருந்து வருகிறார். தற்காலத்தில் கிரிக்கெட் வள்ளுநர் மற்றும் வர்ணணையாளராகவும் உள்ளார்.
கீரன் மோர் காயம் காரணமாக விலகிய காரணத்தால் நய்ன மோன்ஜீயா விக்கெட் கீப்பராக களமிறக்கப்பட்டார். இந்திய அணியில் தனது இடத்தை உறுதியாக்க இவர் இரு வருடங்கள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. ஒருநாள் கிரிக்கெட்டில் 110 கேட்ச் மற்றும் 45 ஸ்டம்பிங் ஆகியவற்றை செய்து அசத்தியுள்ளார் நயன் மோன்ஜீயா. ஸ்டம்பிங் செய்வதில் வல்லவராக இருந்தார். அத்துடன் அணியின் ஒரு முக்கிய பேட்ஸ்மேனாக இருந்தார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய கிரிக்கெட் அணிகளுக்கு பயிற்சியாளராக வலம் வந்தார். அத்துடன் விசாக் விக்டர் என்ற உள்ளூர் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பங் பயிற்சியாளராக இருந்து வந்தார்.
1996 உலகக்கோப்பை தொடரில் 2 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற ஆஸீஸ் கபூர் வலதுகை சுழற்பந்து வீச்சாளர். அதிகப்படியான வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள இவர் தவறியதால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்று வந்த இவர் பெரிதாக ஏதும் சாதிக்கவில்லை.