#5 அணில் கும்ளே மற்றும் வெங்கடேஷ் பிரசாத்
1990ல் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த அணில் கும்ளே தனது முதல் உலகக்கோப்பை தொடரை 1996ல் விளையாடினார். வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு 7 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையை பெற்றார். 18 உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர் 22.84 சராசரியுடன் 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் ஆல்-டைம் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக வலம் வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் நிர்வாக இயக்குநராக வெவ்வேறு உள்ளூர் அணிகளில் திகழ்ந்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மூன்றாவது முறை நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் டாப் 5 இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி என்று பார்த்தால் 1996 உலகக்கோப்பையின் காலிறுதிப் போட்டியை தான் முதலில் தேர்வு செய்வார்கள் கிரிக்கெட் ரசிகர்கள். இப்போட்டியில் அமீர் சொஹாலியால் நகைப்பிற்கு உள்ளான வெங்கடேஷ் பிரசாந்த் தரமான ஆட்டத்தை வெளிகொண்டு வந்தார்.இவரது வெவ்வேறு கோண பந்துவீச்சு பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்தது. இரு உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள இவர் 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்விற்கு பின்னர் இந்திய U19 அணி மற்றும் இந்திய அணி ஆகியவற்றிற்கு பயிற்சியாளராக இருந்தார். அத்துடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் பௌலிங் பயிற்சியாளராகவும் வலம் வந்தார். இவர் தற்போது கிரிக்கெட் வர்ணணையாளராக உள்ளார்.