21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த கேப்டன் யார்? 

GREATEST CAPTAINS OF INDIA
GREATEST CAPTAINS OF INDIA

சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் போட்டிகளில் வரலாறு காணாத வெற்றியை பெற்று தொடரையும் கைப்பற்றியது. இதுவே இந்தியா ஆஸ்திரேலியாவில் வென்ற முதல் டெஸ்ட் தொடர் என்பதால் தற்போதைய அணி தான் இந்தியாவின் தலைசிறந்த அணியா? என்ற விவாதம் எழுந்தது. இதற்கு இந்திய அணியின் தலமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரியும் விருப்பம் தெரிவித்தார். என்றாலும் இதை பலர் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனாலும் தற்போதைய பந்துவீச்சாளர்களை போல இந்திய அணியில் எப்பொழுதும் இருந்ததில்லை என்பதை அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டும். இந்திய அணி தசாப்தங்களாக பேட்டிங்கில் சிறப்பாக இருந்து வருகின்றது. பௌலிங் தான் அணியின் பின்னடைவாய் இருந்து வந்தது முக்கியமாக இந்தியாவை விட்டு வெளியே செல்லும் பொழுது பௌலர்கள் பெரிதாக அணியின் வெற்றிக்கு உதவவில்லை.

சமீப காலமாக பேட்டிங்கில் சற்று தடுமாறி வரும் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா தொடரை தவிர்த்து, ஆஸ்திரேலியாவில் சிறப்பாக செயல்பட்டனர் ஆகையால் இந்த அணி தான் இந்தியாவின் தலைசிறந்த அணி என்று சொல்லி விட முடியாது. தற்போது வளர்ந்து வரும் அணி இதைவிட சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. ஆகையால் சிறந்த அணி எது என்ற விவாதம் ஒருபுறம் இருக்கட்டும்.

உண்மையில் நாம் பார்க்கவேண்டியது 21ஆம் நூற்றாண்டில் அதாவது 2000ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணி உள்நாட்டில் மட்டும் ஆதிக்கம் செலுத்தாமல் வெளிநாட்டு மண்ணிலும் பல வெற்றிகளை குவிக்க துவங்கியது.

இக்காலகட்டங்களில் இந்திய அணி சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, எம் எஸ் தோனி மற்றும் தற்போதைய கேப்டன் விராட் கோலி போன்ற சிறந்த வீரர்களின் தலைமையில் வெற்றிகளை பெற்றுள்ளது. இதில் கங்குலி, தோனி மற்றும் கோலி ஆகிய மூவரின் பங்களிப்பு தான் மிக அதிகம். இவர்கள் தான் அனைத்து விதமான போட்டிகளிலும் கேப்டன்களாக இருந்தனர் மேலும் நீண்ட காலமாக கேப்டன் பதவியில் நீடித்தவர்களும் இவர்கள் தான்.

கும்ப்ளே டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தலைமை வகித்துவந்தார். டிராவிட் இடமிருந்த கேப்டன் பதவி 2007-ல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறியதால். அவர் தன் கேப்டன் பதவியை விட்டு விலகினார் ஆகையால் பதவி கும்ப்ளே வசம் வந்தது.

தற்போது கேப்டன் பதவியில் கங்குலி, தோனி மற்றும் கோலி செய்த சாதனைகளை காண்போம்.

#1 சவுரவ் கங்குலி

sourav ganguly
sourav ganguly

ஒருநாள் போட்டிகள் விவரம்

போட்டிகள்:146, வெற்றி:76, தோல்வி:65, வெற்றி சதவிகிதம்:53.90

டெஸ்ட் போட்டிகள் விவரம்

போட்டிகள்:49, வெற்றி:21, தோல்வி:13, டிரா:15, வெற்றி சதவிகிதம்:42.5

#2 எம் எஸ் தோனி

MSD
MSD

ஒருநாள் போட்டிகள் விவரம்

போட்டிகள்:199, வெற்றி:110, தோல்வி:74, டிரா:4, முடிவு இல்லை:11, வெற்றி சதவிகிதம்:59.57

டெஸ்ட் போட்டிகள் விவரம்

போட்டிகள்:60, வெற்றி:27, தோல்வி:18, டிரா:15, வெற்றி சதவிகிதம்:45

டி20 போட்டிகள் விவரம்

போட்டிகள்:72, வெற்றி:41, தோல்வி:28, டிரா:1, முடிவு இல்லை:2, வெற்றி சதவிகிதம்:56.94

#3. விராட் கோலி

KING KOHLI
KING KOHLI

ஒருநாள் போட்டிகள் விவரம்

போட்டிகள்:61, வெற்றி:44 தோல்வி:14, டிரா:1, முடிவு இல்லை:1, வெற்றி சதவிகிதம்:72.13

டெஸ்ட் போட்டிகள் விவரம்

போட்டிகள்:46, வெற்றி:26, தோல்வி:10, டிரா:10, வெற்றி சதவிகிதம்:56.52

டி20 போட்டிகள் விவரம்

போட்டிகள்:20, வெற்றி:12, தோல்வி:7, டிரா:1, வெற்றி சதவிகிதம்:60.00

மேலுள்ள விவரங்களை வைத்து பார்க்கையில் மூன்று கேப்டன்களும் அணிக்காக பல வெற்றிகளை பெற்று தந்துள்ளனர். புள்ளி விவரங்களின் அடிப்படையில் பார்த்தால் விராட் கோலி தான் சிறந்த கேப்டன் என்று சொல்லலாம். ஆனால் அவர் இன்னும் பல போட்டிகளை சந்திக்கவுள்ளார் என்பதால் கோலியை சிறந்த கேப்டன் என சொல்லிவிட முடியாது.

கோலியை பொறுத்தவரை மைதானத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பார், போட்டியில் வெற்றி பெற கடுமையான முறையில் முயற்சிப்பார். இளம் வீரர்களை அதிகமாக ஊக்குவிப்பார். மேலும் பேட்டிங்கிள் தலைசிறந்த கோலி பல சாதனைகளை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தோனியை பொறுத்தவரை ஓர் சிறந்த தலைவருக்கான அனைத்து பண்புகளும் கொண்டவர். ஆட்டத்தின் அனுபவம் கொண்டவர் இன்றளவிலும் இந்திய அணிக்கு வெற்றிகளை பெற்று தந்து வருகிறார். எப்பொழுதும் அமைதியாக இருக்கும் தோனி ஆட்டத்தில் சிறந்த முடிவை எடுப்பதில் வல்லவர். இளம் வீரர்களை ஊக்குவிக்கும் வல்லமை பெற்றவரும் ஆவார்.

கங்குலி தனக்கென தனி தன்மையை பெற்றவர். இவரது தலைமையில் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை குவிக்க துவங்கியது மற்றும் தைரியமாக விளையாடவும் செய்தது. களத்தில் ஆக்ரோஷமாக இருக்கும் கங்குலி திறமையான வீரர்களை தனது அணியில் எப்போதும் இடம்பிடிக்க செய்தார். மற்றும் அவர்களிடம் இருந்து பல செயல்திறன்களை கொண்டுவந்தார். இவர் சிறந்த வீரர்களுக்கு பல முறை வாய்ப்புகள் அளித்து அணிக்கு வெற்றிகளை பெற்று தந்துருக்கிறார்.

இவர்கள் மூவரிடையே ஓர் ஆச்சரியமான ஒற்றுமை என்னவென்றால் ஒருநாள் போட்டிகளில் இவர்களது அதிக ஸ்கோர் 183 ஆகும். மேலும் மூவரும் இதை அவர்கள் கேப்டன் ஆகும் முன் அடித்தனர்.

சிறந்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு வருகையில் தோனி மற்றும் கங்குலிக்கு இடையே சமன் தான். தோனி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றினாலும். அவரது தலைமையில் இந்திய அணி வெளிமண்ணில் விளையாடிய ஆறு டெஸ்ட் தொடர்களில் வெற்றி ஏதும் பெறவில்லை. கங்குலியை பொறுத்தவரை அனைத்து இடத்திலும் பயமின்றி விளையாடி அணிக்கு வெற்றிகளை பெற்று கொடுத்திருக்கிறார்.

கோலி இவர்களை விட தனது பேட்டிங்கிள் சிறந்து விளங்கினாலும் இதுவரை ஐசிசி கோப்பைகளை வென்றதில்லை. இவருக்கு இன்னும் நேரம் அதிகமாக இருப்பதால் எதிர்காலத்தில் இவர் மற்ற இருவரையும் பின்னுக்கு தள்ளி சிறந்த கேப்டனாக திகழ்வார் என எதிர்பார்க்கலாம். இதற்கான பயணம் வருகின்ற உலகக்கோப்பையை வெல்வதன் மூலம் துவங்கும்.

முடிவாக கங்குலி, தோனி மற்றும் கோலி ஆகிய மூவரும் தங்களது நாட்டிற்கான பணிகளை சிறப்பாக செய்துள்ளனர் என்பதை அறியலாம்.

எழுத்து: சித்தாந்த

மொழியாக்கம்: காமாட்சி சுந்தரம்

Quick Links

Edited by Fambeat Tamil