#2 சிறந்த வெற்றி-தோல்வி விகிதங்கள் - 2.875

2016 முதல் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் 2.875 என்ற வெற்றி-தோல்வி விகிதங்களை கொண்டுள்ளது. 2016 முதல் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 38 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 23ல் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய அணி சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்பொழுதுமே பெரும் வலிமையுடன் திகழ்ந்துள்ளது. சுற்றுப்பயணம் செய்து விளையாட வரும் எதிரணியை டெஸ்டில் துவம்சம் செய்துள்ளது இந்திய அணி. ( 2016ல் நடந்த நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 3-0 எனவும், இங்கிலாந்திற்கு எதிராக 4-0 எனவும், 2017ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 2-1 எனவும், வங்கதேசம்(2017), இலங்கை(2017) மற்றும் ஆப்கானிஸ்தானிற்கு(2018) எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், 2018ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2-0 எனவும் இந்தியா கைப்பற்றியது).
மேலும் அந்நிய மண்ணில் 2017ல் இலங்கைக்கு எதிராக முதல் முறையாக வைட்-வாஷ் செய்தது இந்திய அணி, அத்துடன் 2016ல் மேற்கிந்தியத் தீவுகளில் 2-0 என முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா. மேலும் 2018ல் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது இந்தியா.
இருப்பினும் கடந்த 3 ஆண்டுகளில் இந்திய அணிக்கு டெஸ்ட் தொடரில் ஒரு சில ஏமாற்றங்கள் இருந்து கொண்டுதான் இருந்துள்ளது. இந்திய அணி மிகுந்த வலிமை கொண்ட அதிரடி பந்துவீச்சையும், உலகின் சிறந்த மிடில் ஆர்டரையும் கொண்டு விளங்குகிறது. இந்திய அணி தான் செய்யும் தவறை திருத்திக் கொண்டு அடுத்தடுத்த போட்டிகளில் முன்னேறுகிறது.
சொதப்பலான டாப் ஆர்டர் பேட்டிங், மோசமான அணித்தேர்வு மற்றும் முறையற்ற பயிற்சியின்மை ஆகியன தென்னாப்பிரிக்க தொடரில் இந்திய அணியின் டெஸ்ட் வெற்றியை மங்கச்செய்தது. 1986 மற்றும் 2007 ஆகிய இரு வருடங்களைத் தவிர இந்தியாவிற்கு மற்ற அனைத்து முறையும் சிறப்பான கிரிக்கெட் வருடங்களாக அமைந்துள்ளது.