#1 இரண்டாவது மிகப்பெரிய வேகப்பந்து வீச்சு சராசரி - 26.17

நீங்கள் இந்திய கிரிக்கெட் அணியின் நீண்டகால ரசிகராக இருந்தால் கண்டிப்பாக தற்போது உள்ள சிறப்பான வேகப்பந்து வீச்சிற்கும் கடந்த கால சிறந்த வேகப்பந்து வீச்சிற்கும் உள்ள வேறுபாடு புரியும்.
கடந்த காலங்களில் இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றால் நமக்கு உடனே தென்படுவர்கள் கபில் தேவ், ஜவஹால் ஶ்ரீ நாத், ஜாஹீர் கான் மற்றும் இர்பான் பதான் ஆவார்கள். இத்தகைய சிறந்த வேகப்பந்து வீச்சை தற்காலத்தில் இந்திய அணியில் காண முடியாது என அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் தற்போது அதைவிட ஒருமடங்கிற்கு மேலான திறன் கொண்ட வேகப்பந்து வீச்சு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.
புள்ளி விவரங்கள் அவர்களைப் பற்றி எடுத்துரைக்கும்:
2016 முதல் இந்திய டெஸ்ட் அணியின் பௌலிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக்ரேட் முறையே 26.17 மற்றும் 52.5 ஆகும். இதற்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்க அணியின் டெஸ்ட் வேகப்பந்து வீச்சு சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் முறையே 22.52 மற்றும் 42.2 ஆகும்.
சிறந்த சீரான வேகத்தை தவிர, இந்திய அணியில் அதிகபடியான டெஸ்ட் வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். உமேஷ் யாதவ் தனது ரிவர்ஸ் ஸ்விங் மூலம் இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னை பல முறை நிரூபித்துள்ளார். இந்திய மண்ணில் ரவிச்சந்திரன் அஸ்வின் 108 விக்கெட்டுகளையும், ஜடேஜா 94 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 50 விக்கெட்டுகளையுப் கைப்பற்றியுள்ளனர்.
அந்நிய மண்ணில் ஜாஸ்பிரிட் பூம்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி ஆகிய மூவரும் சிறப்பான ஆதிக்கத்தை வேகப்பந்து வீச்சில் செலுத்தி வருகின்றனர். பூம்ரா அந்நிய மண்ணில் 10 போட்டிகளில் பங்கேற்று 49 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 26.33 சராசரியுடன் 66 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 26. 34 சராசரியுடன் 97 விக்கெட்டுகளையும் 2016லிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் வீழ்த்தியுள்ளனர்.
பூம்ரா (48), இஷாந்த் சர்மா (41), முகமது ஷமி (47) ஆகிய மூவரும் 2018ல் மட்டும் 138 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் புஜாரா மற்றும் விராட் கோலி ஆதிக்கத்தை செலுத்தி வருவது ஒரு பக்கம் இருக்க, டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு முண்ணனி காரணமாக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்துள்ளனர். இதற்கு சான்று 2018ல் நடந்த ஆஸ்திரேலிய தொடர்.