நடந்தது என்ன?
இனிவரும் காலங்களில் மகேந்திர சிங் தோனி அணியில் தொடருவாரா என்பது கேள்விக்குறிக்கு உள்ளாகியுள்ளது. தோனி இல்லாமல் இந்திய அணி விளையாட கற்றுக் கொள்ள வேண்டும் என அவரது முதல் சர்வதேச கேப்டன் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
உங்களுக்கு தெரியுமா
2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியிலிருந்து வெளியேறியதையடுத்து முன்னாள் மற்றும் இன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மகேந்திர சிங் தோனி தனது ஓய்வினை அறிவிப்பார் என நினைத்திருந்தனர். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான தேர்வில் மகேந்திர சிங் தோனி விலகி இராணுவ படைப்பிரிவிற்கு சேவை செய்ய கிளம்பி விட்டார்.
கதைக்கரு
கிரிக்கெட் ஓய்வு என்பது அனைத்து வீரர்களின் வாழ்விலும் கண்டிப்பாக ஒருநாள் வரக் கூடிய ஒரே இக்கட்டான சூழ்நிலை ஆகும் என "இந்தியா டுடே" பத்திரிகைக்கிற்கு சவ்ரவ் கங்குலி நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
"எவ்வளவு பெரிய விளையாட்டு வீரராக இருந்தாலும் ஒருநாள் கண்டிப்பாக ஓய்வு பெறுவர். இதுதான் விளையாட்டின் நியதி. கால்பந்தில் மரடோனா ஓய்வு பெற்றார். அவரை விட பெரிய வீரர் இங்கு யாருமில்லை. டெண்டுல்கர், லாரா, பிராட்மேன் என அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டனர். இந்த நிலைதான் அனைத்து வீரர்களுக்கும். இதனை ஒரு சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதே நிலையைத்தான் மகேந்திர சிங் தோனியின் ஓய்விலும் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்."
இருப்பினும், மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு முடிவை தானே எடுக்க வேண்டும் என கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
"மகேந்திர சிங் தோனி தற்போது தனது கிரிக்கெட் வாழ்வில் எந்நிலையில் இருக்கிறார் என அவரே மதிப்பிட வேண்டும். இனிமேலும் இந்திய அணிக்காக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்ல முடியுமா என்பதை அவரே மதிப்பிடுதல் அவசியம். தோனி தொடர்ந்து இந்திய அணிக்காக தனது பங்களிப்பை அளிக்க விரும்பினால் யாரும் அவருக்கு இடையூராக இருக்க கூடாது."
சச்சின் டெண்டுல்கர் அவர் விரும்பும் வரை விளையாடினார். அதைப்போலவே மகேந்திர சிங் தோனி, விராட் கோலி போன்றோருக்கும் அவர்களது விருப்பப்படி எவ்வளவு நாள் வேண்டுமானலும் வாய்ப்பளிக்க வேண்டும். களத்தில் அவர்களுக்கே அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். தோனியும் நான் கூறிய முடிவைத்தான் நினைத்து வைத்திருப்பார் என நினைக்கிறேன். தன்னிடம் இன்னும் எவ்வளவு திறன் உள்ளது, தான் விளையாடும் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும் அளவிற்கு நம்மிடம் திறமை உள்ளதா எனபது விளையாடும் கிரிக்கெட் வீரருக்கு மட்டும்தான் தெரியும்."
மகேந்திர சிங் தோனி எப்பொழுது ஓய்வினை அறிவிப்பார் என தெரியவில்லை. எனவே இந்திய அணி தோனி இல்லாமல் விளையாட கற்று கொள்ள வேண்டும் என கங்குலி தன் கருத்தை கூறியுள்ளார்.
"மகேந்திர சிங் தோனி இனிமேல் அதிகப்படியான போட்டிகளில் விளையாடுவது கடினம். இதை இந்திய அணி உணர்ந்து அவர் இல்லாமலேயே சிறப்பாக விளையாட பழகிக்கொள்ள வேண்டும். மகேந்திர சிங் தோனி தனது ஓய்வு முடிவை அவரே எடுப்பார் என நான் நம்புகிறேன்."
அடுத்தது என்ன?
இந்திய அணி அடுத்த மாதத்தில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மோத உள்ளது. இந்தத்தொடருக்கான இந்திய அணி தேர்வில் தோனி தன்னை ஈடுபடுத்திக் கொள்வாரா, அவ்வாறு ஈடுபடுத்தினாலும் இத்தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டு உள்ளனர்.