கடந்த 2015ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி கிரிக்கெட் விளையாட்டில் மிக பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் நமது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தான்.
2015ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணி இதுவரை 20 ஒரு நாள் போட்டி தொடர்களில் ஆடியுள்ளது. இன்று காலை தொடங்கிய நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடர் 21வது தொடராகும். இந்த 20 தொடர்களில் 13 தொடர்களில் வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி 89 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 57 போட்டிகளில் வெற்றியும் 27 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது. மேலும் இரண்டு போட்டிகள் டையில் முடிந்துள்ளது. 2015ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி பெற்றுள்ள வெற்றி விகிதத்தின் சராசரி 67.05% ஆகும். இவ்வாறு இந்திய அணியின் வெற்றிக்கு உதவிய இந்திய பேட்ஸ்மேன்களை பற்றியும் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலை பற்றியும் இங்கு விரிவாக காண்போம்.
#2) ரோஹித் சர்மா
2015ஆம் ஆண்டிற்கு பிறகு அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார் நம் இந்திய அணியின் துணை கேப்டன் மற்றும் நம் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா. இவர் கடந்த நான்கு வருடங்களில் 70 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 3887 ரன்களை அடித்துள்ளார். இவரது சராசரி 64.78 ஆகும். இந்த 70 ஒருநாள் போட்டிகளில் 17 சதங்களையும், 14 அரைச் சதங்களையும் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 208 ரன்கள் குவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் ரோஹித் ஷர்மா 2 ஆண்டுகளில் ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 2017 ஆம் ஆண்டு 21 போட்டிகளில் ஆடியுள்ள ரோஹித் சர்மா 1293 ரன்களும், 2018ஆம் ஆண்டில் 19 போட்டிகளில் ஆடியுள்ள ரோஹித் ஷர்மா 1030 ரன்களும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#1) விராட் கோலி
2015 ஆம் ஆண்டிற்கு பிறகு அதிக ரன்களை குவித்த இந்திய வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் நம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. இந்திய அணி சேஸிங்கில் தான் அதிக வெற்றிகளை கண்டுள்ளது. அதற்கு முக்கிய காரணம் நமது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தான். இவர் கடந்த நான்கு வருடங்களில் 73 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 4177 ரன்களை குவித்துள்ளார். இவரது சராசரி 74.58 ஆகும். இந்த 73 ஒருநாள் போட்டிகளில் 18 சதங்களையும், 15 அரைச் சதங்களையும் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகபட்சமாக 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரின் 3வது போட்டியில் ஆட்டமிழக்காமல் 160 ரன்கள் குவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் விராட் கோஹ்லி 2 முறை ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு 26 ஒரு நாள் போட்டிகளில் ஆடிய விராட் கோஹ்லி 1460 ரன்களும், 2018ஆம் ஆண்டு 14 போட்டிகளில் ஆடியுள்ள விரட் கோஹ்லி 1202 ரன்களும் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.