சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிக முக்கியமான தொடர் என்றால், அது உலக கோப்பை தொடர் தான். இந்த உலகக் கோப்பை தொடரானது நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படும். அவ்வண்ணம் கடந்த 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டில், உலக கோப்பை தொடரானது நடத்தப்பட்டது. அந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் சிறந்த வெற்றிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) பாகிஸ்தான் அணிக்கு எதிராக ( 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில், பாகிஸ்தான் அணியும், இந்திய அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 15 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு தவான் மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து மிக சிறப்பாக விளையாடினர். தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய தவான் 73 ரன்கள் விளாசினார்.
இவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி, 106 ரன்கள் விளாசினார். மிடில் ஆர்டரில் வெளுத்து வாங்கிய சுரேஷ் ரெய்னா, 56 பந்துகளில் 74 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்தது.
![Virat Kohli](https://statico.sportskeeda.com/editor/2019/05/d5fdf-15584993050348-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/05/d5fdf-15584993050348-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/05/d5fdf-15584993050348-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/05/d5fdf-15584993050348-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/05/d5fdf-15584993050348-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/05/d5fdf-15584993050348-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/05/d5fdf-15584993050348-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/05/d5fdf-15584993050348-800.jpg 1920w)
301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய அஹமத் ஷெசாத், 47 ரன்கள் விளாசினார். இவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய யூனிஸ்கான், வெறும் 6 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக், 76 ரன்கள் விளாசினார்.
மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். இறுதியில் 47 ஓவர்களின் முடிவில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
#2) தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ( 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி )
![India Cricket Team](https://statico.sportskeeda.com/editor/2019/05/bd5d5-15584993477510-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/05/bd5d5-15584993477510-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/05/bd5d5-15584993477510-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/05/bd5d5-15584993477510-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/05/bd5d5-15584993477510-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/05/bd5d5-15584993477510-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/05/bd5d5-15584993477510-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/05/bd5d5-15584993477510-800.jpg 1920w)
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில், தென் ஆப்பிரிக்கா அணியும், இந்திய அணியும் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா, டக் அவுட் ஆகி வெளியேறினார். மிகச் சிறப்பாக விளையாடிய தவான், 136 ரன்கள் குவித்தார். இதில் 16 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வந்த விராட் கோலி, நிதானமாக விளையாடி 46 ரன்கள் அடித்தார். மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடிய அஜிங்கிய ரஹானே, 60 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இறுதியில் 50 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்தது.
![Shikhar Dhawan](https://statico.sportskeeda.com/editor/2019/05/5a078-15584993952043-800.jpg?w=190 190w, https://statico.sportskeeda.com/editor/2019/05/5a078-15584993952043-800.jpg?w=720 720w, https://statico.sportskeeda.com/editor/2019/05/5a078-15584993952043-800.jpg?w=640 640w, https://statico.sportskeeda.com/editor/2019/05/5a078-15584993952043-800.jpg?w=1045 1045w, https://statico.sportskeeda.com/editor/2019/05/5a078-15584993952043-800.jpg?w=1200 1200w, https://statico.sportskeeda.com/editor/2019/05/5a078-15584993952043-800.jpg?w=1460 1460w, https://statico.sportskeeda.com/editor/2019/05/5a078-15584993952043-800.jpg?w=1600 1600w, https://statico.sportskeeda.com/editor/2019/05/5a078-15584993952043-800.jpg 1920w)
308 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. டி காக் மற்றும் ஹாஷிம் அம்லா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே பவர் பிளே ஓவர்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்து நிதானமாக விளையாடிய டு பிளசிஸ், 55 ரன்கள் விளாசினார்.
இவருடன் ஜோடி சேர்ந்து நிலைத்து நின்று விளையாடிய, ஏபி டி வில்லியர்ஸ் 30 ரன்கள் அடித்தார். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் சொல்லும் அளவிற்கு பெரிதாக ரன்கள் ஏதும் அடிக்கவில்லை. இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 40 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே இந்திய அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.