நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் உலக கோப்பை தொடர் ஆனது, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் மத்தியில் மிக முக்கியமான தொடராக அமைந்துள்ளது. இந்த ஆண்டு உலக கோப்பை தொடர் ஆனது, இன்னும் சில தினங்களில் இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது. இதற்காக நமது இந்திய அணி, இங்கிலாந்து நாட்டிற்கு சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அனைத்து அணிகளிலும் சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருப்பதால், இந்த ஆண்டு எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக கோப்பை தொடரில், இந்திய அணியின் சிறந்த வெற்றிகளைப் பற்றி இங்கு காண்போம்.
#1) அயர்லாந்து அணிக்கு எதிராக ( 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி )
2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், அயர்லாந்து அணியும், இந்திய அணியும் மோதியது. இந்த போட்டியில் அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. பால் ஸ்டிர்லிங் மற்றும் போர்டர்பீல்ட் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சிறப்பாக விளையாடி, அயர்லாந்து அணிக்கு நல்ல துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய போர்டர்பீல்ட், 67 ரன்கள் விளாசினார்.
இவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய ஸ்டிர்லிங், 42 ரன்கள் அடித்தார். அடுத்து வந்து சிறப்பாக விளையாடிய நியால் ஓ பிரையன், 75 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். இறுதியில் அயர்லாந்து அணி 49 ஓவர்களின் முடிவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் அடித்தது.
260 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினார். இருவருமே அதிரடியாக விளையாடி, இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய தவான், 85 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இதில் 11 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். இவருடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, 64 ரன்கள் விளாசினார். அடுத்து வந்த விராட் கோலி, 44 ரன்கள் அடித்தார். இறுதியில் இந்திய அணி 36 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
#2) ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ( 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி )
2015 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில், இந்திய அணியும், ஜிம்பாப்வே அணியும் மோதியது. இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. சிபாபா மற்றும் மசகடா ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே பவர் பிளே ஓவர்களில் ஒற்றை இலக்கத்தில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து வந்து வெளுத்து வாங்கிய பிரண்டன் டெய்லர், 110 பந்துகளில் 138 ரன்கள் விளாசினார். இதில் 15 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். அடுத்து வந்து சிறப்பாக விளையாடிய வில்லியம்ஸ், 50 ரன்கள் விளாசினார். இறுதியில் ஜிம்பாப்வே அணி, 49 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 287 ரன்கள் குவித்தது.
288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. ரோகித் சர்மா மற்றும் தவான் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்து நிதானமாக விளையாடிய விராட் கோலி, 38 ரன்கள் அடித்தார். அதன் பின்பு ரெய்னா மற்றும் தோனி ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடினர். அதிரடியாக விளையாடிய ரெய்னா, 110 ரன்கள் விளாசினார். இவருடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய தோனி, 85 ரன்கள் விளாசினார். இவர்களது அதிரடியால் இந்திய அணி 48 ஓவர்களின் முடிவில், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.