கிரிக்கெட் தொடங்கிய காலத்தில் இருந்து, இன்றுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியும், ஒரு தலை சிறந்த அணியாக திகழ்கிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மிகப்பெரிய சாதனையாளர்களாக விளங்கிய பல பேர் நமது இந்திய அணியை சேர்ந்தவர்கள் தான். அன்றுமுதல் இன்று வரை நமது இந்திய அணியில் திறமையான வீரர்களுக்கு பஞ்சமில்லை. அதனால் தான் இன்று வரை கிரிக்கெட் விளையாட்டில் இந்திய அணி நம்பர்-1 அணியாக திகழ்கிறது. அதுவும் குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், அணில் கும்ப்ளே போன்ற மிகப் பெரிய ஜாம்பவான்கள் நமது இந்திய அணிக்கு பெருமை சேர்த்தவர்கள்.
இது போன்ற பல திறமையான வீரர்கள் நமது இந்திய அணியில் இருந்ததால்தான் பல போட்டிகளில் வெற்றி பெற முடிந்தது. அதுவும் குறிப்பாக ஒருநாள் போட்டிகளில் பல சாதனைகளைப் படைத்த சாதனையாளர்கள், நமது இந்திய அணியை சேர்ந்தவர்கள் தான் என்பது பெருமைக்குரியதாக உள்ளது. இவ்வாறு இந்திய அணி கிரிக்கெட் உலகில் தலை சிறந்த அணியாக இருந்தாலும் ஒருசில நாடுகளுடன் இந்திய அணி அதிக முறை தோல்வியை தழுவி இருக்கிறது. இதைப் பற்றி இங்கு காண்போம்.
#1) ஆஸ்திரேலிய அணியிடம் ( 74 முறை தோல்வி அடைந்துள்ளது )
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணிக்கு நிகரான ஒரு அணி இருக்கிறது என்றால் அது ஆஸ்திரேலிய அணி தான். ஆஸ்திரேலிய அணியும் பல ஜாம்பவான்கள் விளையாடிய அணி தான். குறிப்பாக ஷேன் வார்னே மற்றும் ரிக்கிபாண்டிங் போன்ற ஜாம்பவான்கள் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 138 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் இந்திய அணி வெறும் 47 போட்டிகளில் தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் 74 முறை ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்துள்ளது. இதில் முக்கியமானது என்னவென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில், வெற்றி விட தோல்வியை தான் இந்திய அணி அதிகமாக சந்தித்துள்ளது.
#2) பாகிஸ்தான் அணியிடம் ( 73 முறை தோல்வி அடைந்துள்ளது)
கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்து இந்திய அணி மற்றும் பாகிஸ்தான் அணியை சேர்ந்தவர்கள் எதிரிகள் போன்றுதான் விளையாடி வருகிறார்கள். இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதுகின்ற போட்டிகளுக்கு, கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி மிக விறுவிறுப்பாக இருக்கும். இருநாட்டு கிரிக்கெட் வீரர்களும் தங்களது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல், இறுதி வரை கடுமையாக போராடுவார்கள். இதனால்தான் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இன்று வரை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 134 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளனர். அது இந்திய அணி 54 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அணியிடம், இந்திய அணி 73 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.