உலக கோப்பை தொடருக்கு பின்னர், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் துவங்கி இருக்கின்றது. அடுத்த ஆண்டு உலக கோப்பை தொடர் துவங்குவதற்கு ஏதுவாக பல்வேறு சர்வதேச டி20 போட்டிகளில் பங்கேற்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அதன்படி, இந்த தொடரின் ஆரம்பத்திலேயே 3 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. மறுமுனையில், உலக கோப்பை தொடரில் மிகுந்த ஏமாற்றம் அளித்த வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 போட்டிகளில் பலமிகுந்து காணப்படுவதால் இந்திய அணிக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் உள்ளது. உலக கோப்பை தொடருக்கு பின்னர், இந்த இரு அணிகளும் தங்களது அணியை மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக இந்த தொடர் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, அணியில் பல்வேறு இளம் வீரர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இனிவரும் காலங்களில் தொடர்ந்து அணியில் நீடிக்க முற்படுவார்கள். எனவே, இந்த இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான தொடரில் பங்கேற்கும் இளம் வீரர்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கும் 5 வீரர்களைப் பற்றி இத்தொகுப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
#5.சிம்ரான் ஹெட்மயர்:
கடந்த ஆண்டு இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஒருநாள் போட்டிகளில் ஒரு சதம் உட்பட 259 ரன்கள் விளாசி அதிக ரன்களை குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதன்மூலம், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக இடம்பெற்று ஓரளவுக்கு இந்திய பந்துவீச்சாளர்களில் மன நிலையை அடைந்துள்ளார். இவர் இந்திய மண்ணில் சிறப்பாக செயல்படாத போதிலும் தங்களது சொந்த மண்ணில் அபாரமாக செயல்படுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 22 வயதான இவர், உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளில் சிறப்பான சாதனைகளைப் படைத்துள்ளார். மேலும் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வழிநடத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 2019 உலகக்கோப்பை தொடரில் இவர் சிறப்பாக செயல்படவில்லை. எனவே, தமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இந்திய அணிக்கு எதிரான தொடரில் வழங்கப்பட்டிருப்பதை கருத்திற்கொண்டு தமது அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கு போதிய வாய்ப்புகள் உள்ளன.
#4.நவ்தீப் சைனி:
மணிக்கு 150 முதல் 152 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான நவ்தீப் சைனி, இந்திய சீனியர் அணியில் தற்போது இடம்பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனிலும் கூட பெங்களூரு அணியில் இடம் பெற்று 13 போட்டிகளில் 11 விக்கெட்களை கைப்பற்றி ஓரளவுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். எனவே, கேப்டன் விராத் கோலி இவரை அணியின் முக்கிய துருப்பு சீட்டாக பயன்படுத்தி வெற்றி காண்பார். மேலும், இவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணியாகவும் அமையலாம்.
#3.ஸ்ரேயாஸ் அய்யர்:
இந்திய அணியின் நீண்ட கால தேடுதலுக்கு உட்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பொறுப்பை கையாள்வதற்கு ஸ்ரேயாஸ் ஐயரின் சர்வதேச பயணம் மீண்டும் தொடங்கியுள்ளது. 24 வயதான இவர், கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளன. பல்வேறு விதமான உள்ளூர் டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 2500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பலமிக்க இந்திய அணியை தேர்வு செய்யும் வகையில் தற்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
#2.ஓசோன் தாமஸ்:
தொடர்ச்சியான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்களை கைப்பற்றி வரும் ஓசோன் தாமஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். 22 வயதான இவர், நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் 9 போட்டியில் விளையாடி 9 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அவற்றில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்களை கைப்பற்றி 105 ரன்களுக்கு அந்த அணியை சுருட்ட இவரின் பங்களிப்பு ஏதுவாய் அமைந்தது. இந்தியா போன்ற பலமிக்க அணியை எதிர் கொள்ளும் இவரது அபார ஆட்டத்திறன் நிச்சயம் தேவைப்படும்.
#1.ரிஷப் பன்ட்:
தற்போது இந்திய அணியின் அனைத்து மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தயாராகி வரும் ரிஷப் பண்ட், இந்த தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தமது பணியை துவங்க இருக்கின்றார். அணியின் பிரதான ஃபினிஷர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் மகேந்திரசிங் தோனி ஆகியோர் ஓய்வில் இருக்கும் நிலையில், இவர்தான் தற்போது ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க உள்ளார். 21 வயதான இவர், இந்தியன் பிரீமியர் லீக்கிலும் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார். தமது பொறுமையையும் ஆக்ரோஷத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அமர்க்களப்படுத்தனால் இனி வரும் அனைத்து மூன்று வடிவிலான தொடர்களிலும் இவர் இடம்பெறுவதற்கான போதிய சாத்தியக்கூறுகள் உள்ளன.