#3.ஸ்ரேயாஸ் அய்யர்:
இந்திய அணியின் நீண்ட கால தேடுதலுக்கு உட்பட்ட மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பொறுப்பை கையாள்வதற்கு ஸ்ரேயாஸ் ஐயரின் சர்வதேச பயணம் மீண்டும் தொடங்கியுள்ளது. 24 வயதான இவர், கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளன. பல்வேறு விதமான உள்ளூர் டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ள இவர், 2500க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பலமிக்க இந்திய அணியை தேர்வு செய்யும் வகையில் தற்போது இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
#2.ஓசோன் தாமஸ்:
தொடர்ச்சியான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்களை கைப்பற்றி வரும் ஓசோன் தாமஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். 22 வயதான இவர், நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் 9 போட்டியில் விளையாடி 9 விக்கெட்களை கைப்பற்றி உள்ளார். அவற்றில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்களை கைப்பற்றி 105 ரன்களுக்கு அந்த அணியை சுருட்ட இவரின் பங்களிப்பு ஏதுவாய் அமைந்தது. இந்தியா போன்ற பலமிக்க அணியை எதிர் கொள்ளும் இவரது அபார ஆட்டத்திறன் நிச்சயம் தேவைப்படும்.
#1.ரிஷப் பன்ட்:
தற்போது இந்திய அணியின் அனைத்து மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தயாராகி வரும் ரிஷப் பண்ட், இந்த தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தமது பணியை துவங்க இருக்கின்றார். அணியின் பிரதான ஃபினிஷர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் மகேந்திரசிங் தோனி ஆகியோர் ஓய்வில் இருக்கும் நிலையில், இவர்தான் தற்போது ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைக்க உள்ளார். 21 வயதான இவர், இந்தியன் பிரீமியர் லீக்கிலும் தனது அபார ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்துள்ளார். தமது பொறுமையையும் ஆக்ரோஷத்தையும் ஒருசேர வெளிப்படுத்தும் ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அமர்க்களப்படுத்தனால் இனி வரும் அனைத்து மூன்று வடிவிலான தொடர்களிலும் இவர் இடம்பெறுவதற்கான போதிய சாத்தியக்கூறுகள் உள்ளன.