ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதன் முதல் டி20 விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பௌலிங்கை தேர்வு செய்தது.
இந்தியXI: ரோகித் சர்மா,கே.எல்.ராகுல்,விராட்கோலி(கேப்டன்),ரிஷப் ஃபண்ட், தினேஷ் கார்த்திக்,தோனி,க்ருநால் பாண்டியா,உமேஷ் யாதவ்,பூம்ரா,மயான்க் மார்கன்டே,யுஜ்வேந்திர சகால்,
ஆஸ்திரேலிய XI: ஆரோன் ஃபின்ச் (கேப்டன்),டார்ஸி ஷார்ட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல், பீட்டர் ஹான்டஸ்கோம்,ஆஸ்டன் டர்னர், நாதன் கவுண்ட்டர் நில்,ஜெ ரிச்சர்ட்சன்,பேட் கமின்ஸ்,ஜேஸன் பெகன்ட்ஆஃப்,ஆடம் ஜம்பா.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்கினர்.ஆட்டத்தின் முதல் ஓவரை ஜேஸன் பெகன்ஆஃப் வீசினார். 2.3வது ஓவரில் ஜேஸன் பெகன்ஆஃப் வீசிய பந்தில் ரோகித் சர்மா ஜாம்பா-விடம் 5 ரன்களில் கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி ,கே.எல்.ராகுலுடன் இனைந்து சற்று அதிரடி ஆட்டத்தை விளையாட தொடங்கினார்.
விராட் கோலி 16 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச டி20யில் ஒரு அணியுடன் அதிக ரன்கள் விளாசிய வீரர்களில் முதலிடத்தை பிடித்தார். 8.4வது ஓவரில் ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் விராட் கோலி , நாதன் கவுல்ட்டர் நில்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 17 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களை அடித்தார்.பின்னர் களமிறங்கிய ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்துவார் என்று எதிர்பார்த்த நிலையில் 9.6ஓவரில் பீட்டர் ஹான்டஸ்கோம்-டம் ரன் அவுட் ஆனார்.
நிலைத்து சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 11.4வது ஓவரில் தனது 5வது சர்வதேச டி20 அரைசதத்தை அடித்தார். 12.2வது ஓவரில் நாதன் கவுல்ட்டர் நில் வீசிய பந்தில் கே.எல்.ராகுல் , ஆரோன் ஃபின்ச்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 36 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்களுடன் 50 ரன்களை அடித்தார். அதன்பின் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் அதே ஓவரின் கடைசி பந்தில் 1 ரன்னில் போல்ட் ஆனார். இந்திய அணி முதலில் பேட் செய்த கடைசி 11 டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக்கின் மொத்த ரன்கள் 130 ஆகும்.
14.6வது ஓவரில் கவுண்டார் நில் வீசிய பந்தில் க்ருநால் பாண்டியா மேக்ஸ்வெல்-டம் 1 ரன்களில் கேட்ச் ஆனார்.16.5வது ஓவரில் பேட் கமின்ஸ் வீசிய பந்தில் உமேஷ் யாதவ் 2 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார். இந்திய அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்தது.தோனி 29 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன்-கவுல்ட்ர்-நில் 3 விக்கெட்டுகளையும் ,ஜாம்பா,பேட் கமின்ஸ்,பெகன்ட்ஆஃப் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
127 என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்களாக டார்ஸி ஷார்ட் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினர்.ஆட்டத்தின் முதல் ஓவரை பூம்ரா வீசினார்.1.6வது ஓவரில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் உமேஷ் யாதவ்-விடம் 1 ரன்னில் ரன் அவுட் ஆனார்.அடுத்தாக களமிறங்கிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் பூம்ரா வேகத்தில் டக் அவுட் ஆனார். ஆரோன் ஃபின்ச் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 172 ரன்களை டி20யில் அடித்த பிறகு 12 போட்டிகளில் பங்கேற்று 133 ரன்களை மட்டுமே அடித்துள்ளார்.
பின்னர் களமிறங்கிய மேக்ஸ்வெல் ,டார்ஸி ஷார்ட்-உடன் இனைந்து அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார்.8.4வது ஓவரில் இவர்களது பார்ட்னர் ஷிப்பில் 50 ரன்கள் வந்தது.12.6வது ஓவரில் மேக்ஸ்வெல் தனது 5வது சர்வதேச டி20 அரைசதத்தை அடித்தார்.13.3வது ஓவரில் சகால் வீசிய பந்தில் மேக்ஸ்வெல், கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 43 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 56 ரன்களை அடித்தார்.
மிகவும் நிலைத்து பொறுமையாக விளையாடி வந்த டார்ஸி ஷார்ட் 15.2வது ஓவரில் க்ருநால் பாண்டியாவிடம் ரன் அவுட் ஆனார். இவர் மொத்தமாக 37 பந்துகளை எதிர்கொண்டு 4 பவுண்டரிகளுடன் 36 ரன்களை அடித்தார்.பின்னர் களமிறங்கிய ஆஸ்டன் டர்னர் க்ருனால் பாண்டியா வீசிய 16.2வது பந்தில் ரன் ஏதுமின்றி போல்ட ஆனார். கடைசி 2 ஓவர்களில் 16 ரன்கள் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற தேவைப்பட்டது. இந்திய பந்துவீச்சு சூறாவளி போல் சுழன்று கொண்டிருந்தது. ஆஸ்திரேலிய அணி மிகுந்த அழுத்ததுடன் விளையாடிக் கொண்டிருந்தது. 18.5வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் பீட்டர் ஹான்டஸ்கோம் , தோனியிடம் 13 ரன்களில் கேட்ச் ஆனார்.
இந்த விக்கெட்டின் மூலம் சர்வதேச டி20 யில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய 2 இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.18.6வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் நாதன் கவுண்ட்டர் நில் 4 ரன்களில் போல்ட ஆனார். கடைசி 6 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது.உமேஷ் யாதவ் கடைசி ஓவரை வீசினார்.ஜெ ரிச்சர்ட்சன் மற்றும் பேட் கமின்ஸ் தலாதலா பவுண்டரிகள் மற்றும் அதிவேக ஓட்டத்தின் மூலம் 14 ரன்கள் அடிக்கப்பட்டு ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தனது சொந்த மண்ணில் சர்வதேச டி20யில் தொடர்ந்து 8 வெற்றிகளை குவித்த இந்திய அணிக்கு இந்த போட்டியின் தோல்வியின் மூலம் சாதனை தகர்க்கப்பட்டது.
மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இரண்டாவது டி20 போட்டி பிப்ரவரி 27 அன்று பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது.