2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரின் மறுபார்வை

இந்தியா vs ஆஸ்திரேலியா 2017
இந்தியா vs ஆஸ்திரேலியா 2017

சொந்த மண்ணில் இந்தியாவிடம் டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி வருகிற 24ம் தேதி முதல் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

சொந்த மண்ணில் அடைந்த தோல்வியை சரிக்கட்ட இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் உலகக் கோப்பைக்கு முன்பு இந்தியாவுக்கு இதுவே கடைசி தொடர் என்பதால் இதனை உலக கோப்பைக்கு ஒரு முன்னோட்டமாக கருதி இந்திய அணி விளையாடும். எனவே இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்தக் கட்டுரையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு இடையே 2017-ல் இந்தியாவில் நடைபெற்ற பற்றிய புள்ளி விவரங்களை இங்கு காண்போம்.

போட்டி முடிவுகள்:

முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நான்காவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4 - 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோராகும்.

மற்றொரு போட்டியில் 137/9 ஆஸ்திரேலிய அணி எடுத்தது இந்தத் தொடரில் அடித்த குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

ரோகித் சர்மா 296 ரன்களுடன் அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

ஐந்தாவது ஒருநாள் போட்டியில் அவர்(ரோகித்) அடித்த 125 ரன்கள் அதிகபட்ச ஸ்கோராகும்.

இந்த தொடரில் மொத்தம் மூன்று சதங்கள் அடிக்கப்பட்டன. ரோகித் சர்மா ஒரு சதமும் பின்ச் ஒரு சதமும் மற்றும் வார்னர் ஒரு சதம் அடித்தனர்.

இந்த தொடரில் மொத்தம் 16 அரைசதங்கள் அடிக்கப்பட்டன. இந்தியவின் ரஹானே அதிகபட்சமாக 4 அரைசதங்கள் அடித்தார்.

பந்துவீச்சாளர்களின் புள்ளி விவரங்கள்:

ஆஸ்திரேலிய அணியின் நாதன் கோல்டர் நில் 10 விக்கெட்டுகள் எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்தோர் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.

நான்காவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் 71 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது.

விக்கெட் கீப்பர் புள்ளிவிவரங்கள்:

இந்திய அணியின் மகேந்திர சிங் தோனி ஆறு டிஸ்மிஸல் செய்து முதலிடம் பிடித்தார்.

பீல்டிங் புள்ளிவிவரங்கள்:

இந்தியன் பும்ரா, ரகானே, மற்றும் மனிஷ் பாண்டே தலா 4 கேட்சுகள் பிடித்து கேட்சுகள் பிடித்தவரின் பட்டியலில் முதல் இடம் பிடித்தனர்.

2017 ஆம் ஆண்டு தொடரைப் போன்று நடைபெறும் இத்தொடரிலும் இந்திய அணி எளிதில் வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Quick Links

App download animated image Get the free App now