ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2-0 என ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது. 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி நண்பகல் 1:30ற்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலியா XI: ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரே, பீட்டர் ஹான்டஸ்கோம், மேக்ஸ்வெல், ஆஸ்டன் டர்னர், நாதன் குல்டர் நில், ஆடம் ஜாம்பா, பேட் கமின்ஸ், ஜேஸன் பெஹாரன்ஆஃப்.
இந்திய XI : ரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பாத்தி ராயுடு, எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜாஸ்பிரிட் பூம்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ்
கவாஜா மற்றும் ஆரோன் ஃபின்ச் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முகமது ஷமி ஆட்டத்தின் தொடக்க ஓவரை வீசினார். 1.3 வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் ஆரோன் ஃபின்ச் ரன் ஏதுமின்றி போல்ட் ஆனார். ஆரோன் ஃபின்சிற்கு இது 100வது ஒருநாள் போட்டியாகும். தனது 100வது போட்டியில் டக் அவுட் ஆன 3 ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் ஃபின்ச். பின்னர் களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ், கவாஜா-வுடன் சேர்ந்து சற்று பொறுப்பான ஆட்டத்தை தொடர்ந்தார். பவர்பிளே ஓவரில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களை அடித்திருந்தது.
20.1வது ஓவரில் கேதார் ஜாதவ் வீசிய பந்தில் மார்கஸ் ஸ்டாய்னிஸ், விராட் கோலி-யிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 53 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகளுடன் 37 ரன்களை அடித்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் கவாஜா பார்ட்னர் ஷிப்பில் 87 ரன்கள் ஆஸ்திரேலிய அணிக்கு வந்தது. 22.5வது ஓவரில் உஸ்மான் கவாஜாவின் 6வது சர்வதேச ஓடிஐ அரைசதம் வந்தது. 23.5வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில் சிறப்பாக விளையாடி வந்த கவாஜா, விஜய் சங்கரிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 76 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 50 ரன்களை எடுத்தார். 24வது ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 100 ரன்களை கடந்தது.
29.6வது ஓவரில் குல்தீப் யாதவ் வீசிய பந்தில், பீட்டர் ஹான்டஸ்கோம் தோனியிடம் ஸ்டம்ப் ஹீட் ஆனார். இவர் மொத்தமாக 30 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரியுடன் 19 ரன்களை எடுத்தார். ஹான்ட்ஸ்கோம் மற்றும் மேக்ஸ்வெல் பார்ட்னர் ஷிப்பில் 37 ரன்கள் வந்தது. 37.5வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் ஆஸ்டன் டர்னர் போல்ட் ஆனார். இவர் மொத்தமாக 23 பந்துகளை எதிர்கொண்டு 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 21 ரன்களை எடுத்தார். ஆஸ்டன் டர்னர் மற்றும் மேக்ஸ்வெல் பார்ட்னர் ஷிப்பில் 37 ரன்கள் வந்தது.
39.5வது ஓவரில் முகமது ஷமி வீசிய பந்தில் சிறப்பாக விளையாடி வந்த மேக்ஸ்வெல் போல்ட ஆனார். இவர் மொத்தமாக 51 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 40 ரன்களை எடுத்தார். பின்னர் களமிறங்கிய நாதன் குல்டர் நில், அலெக்ஸ் கேரே-வுடன் சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை உயர்தினர். 49.5வது ஓவரில் பூம்ரா வீசிய பந்தில் குல்டர் நில், கோலியிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 27 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டரிகளுடன் 28 ரன்களை எடுத்தார். குல்டர் நில் மற்றும் அலெக்ஸ் கேரே பார்ட்னர் ஷிப்பில் 62 ரன்கள் வந்தது. ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. அலெக்ஸ் கேரே 37 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி சார்பில், பூம்ரா, முகமது ஷமி, குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், கேதார் ஜாதவ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
237 என்ற இலக்குடன் ரோகித் சர்மா மற்றும் தவான் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜேஸன் பெஹாரன்ஆஃப் ஆட்டத்தின் முதல் ஓவரை வீசினார். 1.1வது ஓவரில் நாதன் குல்டர்நில் வீசிய பந்தில் தவான், மேகஸ்வெல்-டம் ரன் ஏதுமின்றி கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி , ரோகித் சர்மா-வுடன் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தினை விளையாட தொடங்கினார். பவர்பிளே ஓவரில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 41 ரன்கள் எடுத்தது. 16.6வது ஓவரில் ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் விராட் கோலி எல்.பி.டபள்யு ஆனார். இவர் மொத்தமாக 45 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 44 ரன்களை எடுத்தார். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா பார்ட்னர் ஷிப்பில் 76 ரன்கள் வந்தது.
20.5வது ஓவரில் குல்டர்நைல் வீசிய பந்தில் ரோகித் சர்மா, ஆரோன் ஃபின்ச்-டம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 66 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகளுடன் 36 ரன்களை எடுத்தார். 23.3வது ஓவரில் ஆடம் ஜாம்பா வீசிய பந்தில் அலெக்ஸ் கேரேவிடம் கேட்ச் ஆனார். இவர் மொத்தமாக 19 பந்துகளை எதிர்கொண்டு 2 பவுண்டரிகளுடன் 13 ரன்களை எடுத்தார். 24வது ஓவர் முடிவில் இந்திய அணிக்கு 100 ரன்கள் வந்தது. பின்னர் களமிறங்கிய கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனியுடன் சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
42.6வது ஓவரில் கேதார் ஜாதவ் தனது 6வது ஓடிஐ அரைசதத்தை விளாசினார். அத்துடன் தோனி-கேதார் ஜாதவ் பார்ட்னர் ஷிப்பில் 100 ரன்கள் வந்தது. 45வது ஓவர் முடிவில் இந்திய அணி 200 ரன்களை கடந்ததது. 47.1வது எம்.எஸ்.தோனி தனது 71வது ஓடிஐ அரைசதத்தை அடித்தார். 48.2வது ஓவரிலேயே இந்திய அணி ஆஸ்திரேலியா நிர்ணயித்த இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேதார் ஜாதவ் 87 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 81 ரன்களுடனும், எம்.எஸ்.தோனி 72 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 59 ரன்களை எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இவர்களது பார்ட்னர் ஷிப்பில் 141 ரன்கள் வந்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் குல்டர்நில், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். சிறப்பாக விளையாடிய கேதார் ஜாதவ் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டி மார்ச் 5ஆம் நாள் நாக்பூரில் நடைபெறவுள்ளது.