இந்தியா vs ஆஸ்திரேலியா 2019: முதல் டி20 போட்டியை பற்றிய தகவல், முக்கிய வீரர்கள் மற்றும் உத்தேச XI

Indian team players
Indian team players

சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த தொடரில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி ஓடிஐ மற்றும் டெஸ்ட் தொடர்களை முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் பிப்ரவரி 24 தொடங்கி, மார்ச் 13 அன்று முடிவடைய உள்ளது. இந்த குறுகிய தொடரின் முதல் டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே சொந்த மண்ணில் ஓடிஐ மற்றும் டி20 தொடர்களை இழந்த ஆஸ்திரேலிய அணி பழிவாங்கும் நோக்கில் இந்த தொடரில் களமிறங்கவுள்ளது. இரு அணிகளுக்குமே இந்த தொடர் 2019 உலகக் கோப்பை தொடருக்கு தயாரக ஏதுவாக இருக்கும்.

இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மண்ணில் சிறப்பாக விளையாடியுள்ளதால் , அந்த நம்பிக்கையுடன் இந்த தொடரையும் எதிர்கொள்ள உள்ளது. இந்தியாவிற்கு சொந்த மண் என்பதால் இந்த தொடரை வெல்ல அதிகம் வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலிய அணிக்கு உலகக் கோப்பைக்கு முன் இரு தொடர்கள் உள்ளன. இந்திய தொடர் ஒன்று , மற்றொன்று பாகிஸ்தான் தொடர். எனவே இரு தொடரையும் சரியாக எதிர்கொண்டு உலகக் கோப்பைக்கு தயாராகும் முயற்சியில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தனது சொந்த மண்ணில் தங்களது ஆதிக்கத்தை அதிகமாகவே வெளிபடுத்த வாய்ப்புள்ளது. இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பூம்ரா ஓய்விலிருந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 7 போட்டிகளிலுமே சிறப்பான ரன் குவிப்பில் ஈடுபட்டு வெற்றிகளை குவித்துள்ளது.. இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணி முறியடிக்குமா அல்லது இந்திய அணி இந்த சாதனையை தக்க வைக்குமா என்பதை பொருத்திருந்துதான் காண வேண்டும்.

ஆஸ்திரேலிய அணி அந்நிய மண்ணில் மிகவும் தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் அணியில் இல்லாததால் அந்த அணி பேட்டிங்கில் மிகவும் வலிமை குறைந்ததாகவே காணப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை சரியாக பயன்படுத்தி தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தியாகவே வேண்டும். ஆஸ்திரேலியாவில் இந்திய அணி செய்த பேட்டிங் போல் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் விளையாட வேண்டும். ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்கள் தனது சொந்த மண்ணில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் மிகவும் மோசமாக தடுமாறினர். எனவே ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

தனது சொந்த மண்ணில் தொடரை இழந்த ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை வெனறாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா வந்துள்ளது.ஆஸ்திரேலிய அணிக்கு 2018ஆம் ஆண்டு மிகவும் மோசமானதாக இருந்தது. ஆஸ்திரேலியாவில் நடந்த பிக்பேஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களுடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்க உள்ளதால் ஆஸ்திரேலிய அணி இந்த தொடரை வெல்ல முயற்சிக்கும்.

போட்டியை பற்றிய தகவல் :

நாள்: ஞாயிறு,24 பிப்ரவரி 2019

நேரம்: இரவு 07:00 மணி(இந்திய நேரப்படி)

இடம்: டாக்டர்.வை.எஸ்.ராஜசேகர ரெட்டி ஏசிஏ-வைசிஏ கிரிக்கெட் ஆடுகளம், விசாகப்பட்டினம்

ஒளிபரப்பு: ஸ்டார் நெட்வொர்க்

ஆன்லைன் ஒளிபரப்பு: ஹாட் ஸ்டார்

ஆடுகள புள்ளிவிவரங்கள்:

முதல் பேட்டிங் சராசரி ரன்கள் : 82

இரண்டாவது பேட்டிங் சராசரி ரன்கள் : 84

மொத்தமாக ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட அதிக ரன்கள் : 84/1 (13.5 ஓவர்கள்) இந்தியா vs இலங்கை

மொத்தமாக ஒரு போட்டியில் அடிக்கப்பட்ட குறைவான ரன்கள் : 82/10 (18 ஓவர்கள்) இலங்கை vs இந்தியா

அதிக ரன் சேஸிங்: 84/1(13.5 ஓவர்கள்) இந்தியா vs இலங்கை

நேருக்கு நேர் (கடைசி 5 டி20 போட்டிகளில்)

ஆஸ்திரேலிய - 2

இந்தியா - 1

முடிவில்லை - 2

சமீபத்திய ஆட்டத்திறன்

இந்தியா - தோல்வி, வெற்றி,தோல்வி, வெற்றி, தோல்வி

ஆஸ்திரேலியா - தோல்வி, வெற்றி, தோல்வி, தோல்வி, தோல்வி

அணியின் செய்திகள்:

இந்திய அணியை பொறுத்தவரை தினேஷ் கார்த்திக் அல்லது கே.எல்.ராகுல் ஆடும் XIல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை மிடில் ஆர்டரில் ஆஸ்டன் டர்னர் மற்றும் ஷான் மார்ஷ்ற்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

அணி விவரம் :

ஆஸ்திரேலிய டி20 அணி: ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரே, உஸ்மான் கவாஜா,ஷான் மார்ஷ்,டார்ஸி ஷார்ட்,மார்கஸ் ஸ்டாய்னிஸ்,பேட் கமின்ஸ், மேக்ஸ்வெல்,ஜெ ரிச்சர்ட்சன்,கானே ரிச்சர்ட்சன்,நாதன் கவுண்ட்டர் நில், பீட்டர் ஹான்டஸ்கோம்,ஜேஸன் பெகரன்ட்ஆஃப், நாதன் லயான்,ஆஸ்டன் டர்னர்,ஆடம் ஜம்பா.

இந்திய டி20 அணி:விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துனைக்கேப்டன்),கே.எல்.ராகுல்,ஷிகார் தவான்,ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்,தோனி(விக்கெட் கீப்பர்),க்ருனால் பாண்டியா, விஜய் சங்கர்,யுஜ்வேந்திர சகால்,ஜாஸ்பிரிட் பூம்ரா, உமேஷ் யாதவ்,சித்தார்த் கவுல்,மயான்க் மார்கன்டே.

முக்கிய வீரர்கள்:

ஆஸ்திரேலியா

-ஆரோன் ஃபின்ச்

-மார்கஸ் ஸ்டாயனிஸ்

-பேட் கமின்ஸ்

இந்தியா

-ரோகித் சர்மா

-விராட் கோலி

-க்ருனால் பாண்டியா

உத்தேச XI:

ஆஸ்திரேலியா

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), அலெக்ஸ் கேரே,ஷான் மார்ஷ்( அல்லது ஆஸ்டன் டர்னருக்கு ),டார்ஸி ஷார்ட்,மார்கஸ் ஸ்டாய்னிஸ்,பேட் கமின்ஸ், மேக்ஸ்வெல்,கானே ரிச்சர்ட்சன்,நாதன் கவுண்ட்டர் நில், பீட்டர் ஹான்டஸ்கோம்,ஆடம் ஜம்பா.

இந்தியா

விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துனைக்கேப்டன்),ஷிகார் தவான்,ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்(அல்லது கே.எல்.ராகுல்),தோனி(விக்கெட் கீப்பர்),க்ருனால் பாண்டியா, விஜய் சங்கர்,யுஜ்வேந்திர சகால்,ஜாஸ்பிரிட் பூம்ரா, சித்தார்த் கவுல்(அல்லது உமேஷ் யாதவ்).

Quick Links

Edited by Fambeat Tamil
Sportskeeda logo
Close menu
WWE
WWE
NBA
NBA
NFL
NFL
MMA
MMA
Tennis
Tennis
NHL
NHL
Golf
Golf
MLB
MLB
Soccer
Soccer
F1
F1
WNBA
WNBA
More
More
bell-icon Manage notifications