இந்தியா vs ஆஸ்திரேலியா 2019, 2வது ஒருநாள் போட்டி: விஜய் சங்கரின் எதிர்பாராத ரன்-அவுட் பற்றி டிவிட்டரில் தெறிக்கவிடப்பட்ட டிவிட்டுகள்

MaVijay Shankar
MVijay Shankar

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (மார்ச்-5) ஆரஞ்சு நிற நகரம் என்று அழைக்கப்படும் நாக்பூரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தது. இப்போட்டியில் இந்திய அணிக்கு சரியான தொடக்கம் அமையவில்லை. முதல் ஓவரிலே ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். இந்திய மைதானத்தில் ரோகித் சர்மாவின் முதல் டக் அவுட் இதுவாகும். சற்று பொறுமையாக விளையாடிய தவான், மேக்ஸ்வெல் சுழலில் 21 ரன்களில் வீழ்ந்தார். பொறுப்புடன் விளையாட வேண்டிய அம்பாத்தி ராயுடுவும் சொற்ப ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார்.

அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் கேதார் ஜாதவ் மற்றும் மகேந்திர சிங் தோனிக்கு முன்னதாகவே விஜய் சங்கர் களமிறக்கப்பட்டார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தமக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார். விராட் கோலிக்கு சமமாக ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தார் விஜய் சங்கர். இந்திய கேப்டன் விராட் கோலி தனது 50வது சர்வதேச ஒருநாள் சதத்தை விளாசினார். மறுமுனையில் விஜய் சங்கரும் விராட் கோலியுடன் இணைந்து அதிரடியாக விளையாடி வந்தார். இவர் சில சிறப்பான ஷாட்களை பயன்படுத்தி சிக்ஸர் விளாசி வந்தார். சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என இரண்டிலும் அசத்தினார் விஜய் சங்கர். ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சால் இவரை அசைக்க கூட முடியவில்லை. இத்தகைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் உலகக்கோப்பை இந்திய அணி தேர்வில் இவர் தேர்வாகுவதை யாரலும் தடுக்க இயலாது.

விராட் கோலி-விஜய் சங்கரின் பார்ட்னர் ஷிப்பில் சிறப்பாக ரன்கள் குவிக்கப்பட்டு வந்தது. அத்துடன் ஒரு மிகப்பெரிய ரன்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆடம் ஜாம்பா வீசிய 29வது ஓவரின் முதல் பந்தை நேராக தட்டி விட்டார் விராட் கோலி. ஜாம்பா பந்தை பிடிக்க முற்பட்ட போது அவரது விரலில் பட்டு ஸ்டம்பில் அடித்தது. அதேநேரத்தில் விஜய் சங்கர் கிரிஸை விட்டு வெளியே வந்ததால் மூன்றாம் நடுவர் விக்கெட் என அறிவித்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் பெரிய ரன்களை குவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சியது. எதிர்பாரத சூழ்நிலையில் விஜய் சங்கர் தனது விக்கெட்டை இழந்ததால் ஆடுகளத்தில் இருந்த ரசிகர்கள் மிகுந்த சோகமடைந்தனர்.

நாம் இங்கு விஜய் சங்கரின் ரன்-அவுட் பற்றி டிவிட்டரில் தெறிக்கவிடப்பட்ட சில முக்கிய டிவிட்களை காண்போம்.

மைக்கேல் கிளார்க்:

சஞ்சய் மன்ஜ்ரேக்கர்:

ஆகாஷ் சோப்ரா:

ஹர்ஸா போக்லே:

அயாஜ் மேமோன்:

அபிஷேக் முகர்ஜி:

தீப் தாஸ்குப்தா:

ரசிகர்களின் கருத்து:

Quick Links

App download animated image Get the free App now