ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI

Dhoni & peter handscom
Dhoni & peter handscom

இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இருபோட்டிகளிலும் கடைசி ஓவர் வரை சென்று இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ரசிகர்கள் இரு அணிகளிடமிருந்து அதிக ரன் குவிப்பு மற்றும் விக்கெட்டுகளை எதிர்பார்க்கின்றனர். இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரு அணிகளின் பேட்டிங்கும் சுமாராகவே இருந்தது. இந்திய அணி தக்கசமயத்தில் ஆஸ்திரேலிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

பேட்டிங் மற்றும் பௌலிங்கில் இந்திய அணிக்கு பெரும் தூணாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் திகழ்ந்தார் விஜய் சங்கர். பேட்டிங்கில் அதிவேக 46 ரன்களும், பௌலிங்கில், கடைசி 6 பந்துகளில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 11 ரன்கள் தேவைப்பட்ட போது விஜய் சங்கர் பந்துவீசி ஆஸ்திரேலியாவின் மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்திய கேப்டன் விராட் கோலி தனது 40வது சதத்தை விளாசினார். ஆஸ்திரேலிய அணியினர் களமிறங்கிய போது துவக்கம் மிகச் சிறப்பாக இருந்தது. ஆனால் முடிவு மிகவும் மோசமாக அமைந்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டி தோனியின் சொந்த மண்ணான ராஞ்சியில் நடைபெறவுள்ளது. ராஞ்சியின் ஜே.எஸ்.சி.ஏ மைதானத்தில் இந்திய அணி இதுவரை 4 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணி தற்போது மூன்றாவது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் நோக்கில் உள்ளது.

இந்தியா :

Indian Team
Indian Team

விராட் கோலி தற்போது தொடக்க ஆட்டக்காரர்களிடம் சிறப்பான ஆட்டத்தை எதிர்பார்கிறார். ரோகித் சர்மா மற்றும் ஷிகார் தவான் கடைசி சில ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தர தவறுகின்றனர். இவர்களை தவிர வேறு எந்த சிறப்பான தொடக்க ஆட்டக்காரர்களும் தற்போது இந்திய அணியில் இல்லை. பெரும்பாலும் இந்திய அணி எவ்வித மாற்றமும் இன்றி மூன்றாவது ஒருநாள் போட்டியிலும் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச XI:

ரோகித் சர்மா, ஷிகார் தவான், விராட் கோலி (கேப்டன்), அம்பாத்தி ராயுடு, விஜய் சங்கர், எம்.எஸ்.தோனி, கேதார் ஜாதவ், முகமது ஷமி, ஜாஸ்பிரிட் பூம்ரா, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா

ஆஸ்திரேலியா:

Australian Team
Australian Team

ஆரோன் ஃபின்சின் மோசமான ஆட்டத்தை கண்டு ஆஸ்திரேலிய அணி கவலையடைந்துள்ளது. இதுவரை இந்த தொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. கேப்டனின் ஆட்டத்திறன் உலகக் கோப்பை அணிதேர்வில் மிக முக்கியமான ஒன்றாகும். பெரும்பாலும் டேவிட் வார்னர் இவரது இடத்தை மீண்டும் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் தான் இழந்த பழைய ஆட்டத்திறனை மீண்டும் வெளிக்கொண்டு வந்துள்ளது என்றே கூறலாம். இந்த தொடரில் மிகவும் அற்புதமான பௌலிங்கை ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் வெளிபடுத்தி உள்ளனர். ஆனால் பேட்டிங்கில் வழக்கம் போல் சொதப்பலாகவே உள்ளது. கடந்த முறை ஆஸ்திரேலிய அணி இந்த மைதானத்தில் விளையாடியபோது மேக்ஸ்வெல் அதிவேக 92 ரன்களை குவித்தார், ஆனால் ஆட்டம் மழையினால் தடை பட்டது. ஆஸ்திரேலிய அணியும் எவ்வித மாற்றமும் இன்றி மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய XI:

ஆரோன் ஃபின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹான்ட்ஸ்கோம், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரே, பேட் கமின்ஸ், நாதன் குல்டர் நில், நாதன் லயான், ஆடம் ஜாம்பா.

Quick Links

Edited by Fambeat Tamil