ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றதற்கான 4 காரணங்கள்

Indian Team
Indian Team

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சாள் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது மகேந்திர சிங் தோனி மற்றும் கேதார் ஜாதவ் இனைந்து பொருப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 141 ரன்கள் பார்ட்னர் ஷிப் செய்து இந்திய அணியை 10 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். இந்த தொடர் இந்திய அணிக்கு 2019 உலகக் கோப்பைக்கு முன் கடைசி தொடராகும்.

இந்த தொடர் தொடங்கும் முன் இந்திய அணி நியூசிலாந்தில் 4-1 என்றும் , ஆஸ்திரேலிய மண்ணில் 2-1 என்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. தற்போது முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கு ஒரு அணியையும், அடுத்த 3 ஒருநாள் போட்டிகளுக்கு மற்றொரு அணியையும் இந்திய கிரிக்கெட் அறிவித்துள்ளது.

தற்போது வரை 2019 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணிக்கு 12 வீரர்கள் தங்களது இடங்களை உறுதி செய்துள்ளனர். மற்ற இடங்களில் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் இங்கு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றதற்கான 4 காரணங்களை காண்போம்.

#1: ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்சின் மோசமான ஆட்டத்திறன்

Bumrah took wicket
Bumrah took wicket

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார். ஜஸ்பிரிட் பூம்ரா தனது அசுரவேக பந்துவீச்சால் இரண்டாவது ஓவரிலேயே ஆரோன் ஃபின்சை டக் அவுட் ஆகச் செய்தார். 2019ல் இந்திய மண்ணில் ஒருநாள் போட்டியில் ஆரோன் ஃபின்ச் மோசமாக விளையாடி வருகிறார். அவரது மோசமான ஆட்டத்திறன் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு முன்னர் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் மோசமான ஆட்டத்திறனை ஆரோன் ஃபின்ச் வெளிபடுத்தினார்.

இந்திய பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி முதல் 10 ஓவர்களுக்கு 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் மட்டுமே எடுத்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் சிறிது நேரம் சிறப்பான ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்கு வந்தது. ஆனால் இந்திய பௌலர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இவர்களது பேட்டிங் இல்லை. ஆடுகளம் பெரிது என்பதால் ஆஸ்திரேலிய பேட்டிங் அவ்வளவாக எடுபடவில்லை.

#2: இந்திய பௌலர்களின் ஆல்-ரவுண்டர் திறன்

Kedar jadhav & Kuldeep
Kedar jadhav & Kuldeep

இந்திய பந்துவீச்சாளர்களின் அற்புதமான பந்துவீச்சால் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 236 ரன்களை எடுத்தது. ஆரோன் ஃபின்சின் மோசமான விக்கெட்டிற்கு பிறகு உஸ்மான் கவாஜா மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இரண்டாவது விக்கெட் பார்ட்னர் ஷிப்பிற்கு 87 ரன்கள் குவித்து பொறுப்பான ஆட்டத்தினை வெளிபடுத்தினர். 7வது விக்கெட்டிற்கு அலெக்ஸ் கேரே மற்றும் நாதன் குல்டர்நில்-இடமிருந்து 62 ரன்கள் என்ற சிறப்பான பார்ட்னர் ஷிப் வந்தது. இந்திய அணி 236 ரன்களிலேயே ஆஸ்திரேலிய அணியை மடக்கியது.

கேதார் ஜாதவ் ஒரு முக்கியமான விக்கெட்டான மார்கஸ் ஸாடானிஸின் விக்கெட்டை 37 ரன்களில் வீழ்த்தினார். அத்துடன் முகமது ஷமியின் அற்புதமான வேகத்தால் 10 ஓவர்கள் வீசி 44 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜாஸ்பிரிட் பூம்ரா 60 ரன்களை தனது பௌலிங்கில் அளித்திருந்தாலும் நாதன் குல்டர் நைல்-ன் முக்கியமான விக்கெட்டை டெத் ஓவரில் வீழ்த்தினார். குல்தீப் யாதவ் 46 ரன்கள் அளித்து சிறப்பாக வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

#3: இரண்டாவது விக்கெட்டிற்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பார்ட்னர் ஷிப்பில் 76 ரன்கள்

Virat kholi
Virat kholi

237 என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய போது ஷிகார் தவானின் தொடக்கத்திலேயே ரன் ஏதும் அடிக்காமல் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். இருப்பினும் விராட் கோலி-ரோகித் சர்மா பார்ட்னர் ஷிப் சிறிது ஆறுதல் அளிக்கும் வகையில் இருந்தது. இந்திய கேப்டன் விராட் கோலி தனது அற்புதமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தி 45 பந்துகளில் 44 ரன்களை எடுத்தார். ஆடம் ஜாம்பா-வின் சுழலில் சிக்கி இந்திய கேப்டன் 44 ரன்களில் எல்.பி.டபுள்யு ஆனார்.

இந்திய அணி முதல் 10 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்களை எடுத்திருந்தது. விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இனைந்து இரண்டாவது விக்கெட் பார்ட்னர் ஷிப்பிற்கு 76 ரன்களை குவித்தனர். தொடக்க பார்ட்னர் ஷிப்பான தவான் மற்றும் ரோகித் சர்மா பார்ட்னர் ஷிப் முறிவடைந்த பிறகு விராட் கோலி-ரோகித் சர்மா பார்ட்னர் ஷிப் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு மிகுந்த அழுத்தத்தை அளித்து விளையாடினர்.

விராட் கோலி பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை மிகவும் எளிதாக விளாசினார். ஆஸ்திரேலிய அணியின் கடினமான பந்துவீச்சில் கூட விராட் கோலி மிகவும் எளிதாக ஒரு சிக்ஸரை விளாசினார்.

#4: இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்ற தோனி மற்றும் கேதார் ஜாதவின் 141 ரன்கள் பார்ட்னர் ஷிப்

Kedar jadhav & MSD
Kedar jadhav & MSD

இந்திய அணி 24 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை எடுத்திருந்த போது தோனி ஆஸ்திரேலிய அணியின் பிரஸரை எதிர்கொண்டிருந்த சமயத்தில் கேதார் ஜாதவ் களமிறங்கினார். தோனி,கேதார் ஜாதவிற்கு ஸ்ட்ரைக் மாற்றி கொடுக்க, கேதார் ஜாதவ் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வலது கை பேட்ஸ்மேன் கேதார் ஜாதவ் ஆஸ்திரேலிய அணியின் பௌலிங்கை சரியாக எதிர்கொண்டு 67 பந்துகளில் அரை சதமடித்தார். அத்துடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 81 ரன்கள் விளாசினார்.

2019ல் மகேந்திர சிங் தோனியின் மற்றொரு அருமையான ஆட்டத்திறன் வெளிபட்டது. இவர் 68 பந்துகளில் அரைசதமடித்தார். கேதார் ஜாதவ் மற்றும் மகேந்திர சிங் தோனி இனைந்து 5 விக்கெட்டுகள் பார்ட்னர் ஷிப்பிற்கு 141 ரன்களை குவித்தனர். தோனியும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 59 ரன்களை எடுத்தார். 49வது ஓவரில் தொடர்ச்சியாக இரு பவுண்டரிகளை விளாசிய தோனி 10 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இந்திய அணியினை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது.

Quick Links

App download animated image Get the free App now