இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒருநாள் தொடரில் ஆரம்பத்தில் இந்திய அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் டெல்லியில் நடைபெறவுள்ள 5வது ஒருநாள் போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்திய அணி 2-0 என முதல் இரு ஒருநாள் போட்டியில் வென்று முன்னிலையில் இருந்தது.
ஆஸ்திரேலிய அணி பதிலடி தரும் விதமாக 3 மற்றும் 4வது ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி தொடரை சமன் செய்தது. தற்போது டெல்லியில் நடைபெறவுள்ள 5வது ஒருநாள் போட்டி இரு அணிகளுக்கும் தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது. ஸ்டிவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இல்லாத நிலையில் ஆஸ்திரேலிய அணி பீட்டர் ஹான்ட்ஸ்கோம், ஆஸ்டன் டர்னர் ஆகிய புதிய ஒருநாள் பேட்ஸ்மேன்களை கண்டெடுத்துள்ளது.
மறுமுனையில் ஹர்திக் பாண்டியா இல்லாத நிலையிலும் இந்திய அணி வலிமையாக திகழ்கிறது. அவரது இடத்தை விஜய் சங்கர் முழுவதுமாக பூர்த்தி செய்துள்ளார். ஆனால் டெல்லியில் நடைபெறவுள்ள போட்டியில் இந்திய அணி எம்.எஸ்.தோனியை கண்டிப்பாக மிஸ் செய்யும்.
இந்திய ரசிகர்கள் மற்றும் வீரர்கள் தோனி இல்லாத அணியை அவ்வளவாக விரும்பவில்லை. அத்துடன் தற்போது முதலே தங்களின் மனதை திடப்படுத்தி வருகின்றனர். கண்டிப்பாக உலகக் கோப்பையில் இவரது பங்களிப்பு இந்திய அணிக்கு மிகவும் அதிகமாகவே இருக்கும்.
ஆஸ்திரேலிய அணி ராஞ்சி மற்றும் மொகாலியில் நடந்த கடைசி இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இந்திய அணிக்கு சொந்த மண் ஒருபோதும் கடினமாக இருக்காது. எப்போதும் இந்திய அணிக்கு சாதகமாகவே இருக்கும். நாம் இங்கு 5வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு சாதகமான 5 சூழ்நிலைகள் பற்றி காண்போம்.
#5 தங்களது ஆட்டத்திறனை வெளிக்கொண்டு வந்த இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள்
மொகாலியில் நடந்த போட்டியில் இந்திய அணிக்கு நடந்த ஒரே நன்மை ரோகித் சர்மா, ஷிகார் தவானின் இயல்பான ஆட்டத்திறன் மீண்டும் வெளிக்கொணரபட்டதுதான். கடைசி 5 ஒருநாள் போட்டிகளில் 43 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஷாகார் தவான் மொகாலி ஓடிஐயில் 143 ரன்களை விளாசினார். தவானின் ஆட்டத்திறன் டெல்லி ஓடிஐ-யிலும், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பையிலும் மிக முக்கியமானது ஆகும்.
தவானுடன் ஒப்பிடுகையில் ரோகித் சர்மா அவரை விட கடைசி 5 ஒருநாள் போட்டியில் 60 ரன்கள் அதிகமாக அடித்திருந்தார். ஆனால் மொகாலி ஓடிஐயில் 95 ரன்களை விளாசினார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் சிறப்பான பங்களிப்பால் 193 ரன்கள் குவிக்கப்பட்டு 358 என்ற அதிக இலக்கை இந்திய நிர்ணயித்தது. இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் ஒரு பிரச்சினை என்னவென்றால் சேஸிங்கில் மிகுந்த நெருக்கடியுடன் விளையாடி ஜொலிக்கத் தவறுகின்றனர்.
மொகாலியில் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களின் ஆட்டத்திறன் டெல்லி ஓடிஐ-யிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#4 விராட் கோலியின் சீரான ஆட்டத்திறன்
இந்திய கேப்டன் விராட் கோலி இந்த ஒருநாள் தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தி 2 சதங்களை விளாசியுள்ளார். இந்த தொடரில் 72.50 சராசரியுடன் 290 ரன்களை குவித்து அதிக ரன்களை குவித்தோர் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடிய 4வது ஒருநாள் போட்டியில் மட்டுமே விராட் கோலி சோபிக்கவில்லை. தற்போது மொகாலியில் தவறவிட்ட அதிரடி ஆட்டத்தை தனது சொந்த மண்ணான டெல்லி ஓடிஐயில் வெளிபடுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
விராட் கோலி கண்டிப்பாக எம்.எஸ்.தோனியை மிஸ் செய்வார். இந்த தொடரில் விஜய் சங்கர் மற்றும் கேதார் ஜாதவ் இவருடன் சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். ரிஷப் பண்ட் தனது அதிரடி ஆட்டத்தை ஒருநாள் போட்டியிலும் வெளிபடுத்தி வருவது மற்றொரு பக்கபலமாக இந்திய அணிக்கு உள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிகவும் சிறப்பாக உள்ளது. இந்த பேட்டிங் வரிசை எவ்வளவு பெரிய பந்துவீச்சாக இருந்தாலும் தகர்த்து விடுவார்கள். இரு கேப்டன்களில் யார் டாஸ் வென்றாலும் பௌலிங்கையே முதலில் தேர்வு செய்ய அதிக வாய்ப்புள்ளது. ஏனெனில் இரு அணியுமே பேட்டிங்கில் வலிமையாக இருப்பதால் சேஸிங்கையே அதிகம் எதிர்பார்க்கும். ஆஸ்திரேலிய மற்றும் இந்திய ஆகிய இரண்டு அணிகளின் டாப்-3 பேட்ஸ்மேன்கள் மிகவும் சிறந்த ஆட்டத்திறனுடன் திகழ்கின்றனர். இருப்பினும் இந்திய அணிக்கு சொந்த மண் என்ற நன்மை உள்ளதால் இந்திய அணிக்கு சாதகமாக திகழ அதிக வாய்ப்புள்ளது.
#3 சுழற்பந்து வீச்சாளர்களின் மாயாஜாலம்
டெல்லி, பொரோஷா கோட்லா மைதானம் குறைந்த பவுன்ஸ் மற்றும் இயல்பாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக சாதகமாக இருக்கும். இந்த மைதானத்தில்தான் பாகிஸ்தானிற்கு எதிராக அனில் கும்ளே அணியின் மொத்த 10 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
கடந்த கால வரலாற்றை பார்க்கும் போது இந்த மைதானத்தில் ஆஸ்திரேலியாவை விட இந்திய அணிக்கே போட்டியின் முடிவுகள் சாதகமாக இருந்துள்ளது. ஆனால் மொகாலியில் இருந்த அதே பணி பொழிவு டெல்லியில் சற்று அதிகமாகவே இருக்கும். இதனால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு பந்துவீச சற்று கடினமாக இருக்கும்.
டெல்லி மைதானத்தில் ரவீந்திர ஜடேஜா 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 4.05 எகானமி ரேட்-டுடன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குல்தீப் யாதவ் மற்றும் யுஜ்வேந்திர சகால் இருவரும் 5வது ஒருநாள் போட்டியில் களளமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
டெல்லி மைதானத்தில் இந்திய அணி இதுவரை விளையாடிய 20 போட்டிகளில் 12 போட்டிகளில் வென்று 60 சதவீச வெற்றி வாய்ப்பை கொண்டு விளங்குகிறது. இதில் ஒரு போட்டியில் முடிவில்லை. இந்திய அணி இங்கு விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 4 போட்டியில் தொடர்ந்து வென்றுள்ளது.
கோட்லா மைதானத்தில் இந்திய அணி நிறைய சாதனைகளை படைத்துள்ளது. எனவே மார்ச் 13 அன்று நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் 5வது ஒருநாள் போட்டியில் இந்தியா சாதிக்கும்.
#2 சொந்த மண்ணில் இந்திய அணியின் சிறப்பான ஒருநாள் தொடர் சாதனைகள்
இந்திய அணி கடைசி 10 வருடங்களில் தனது சொந்த மண்ணில் விளையாடிய போட்டிகளில் 62% வென்றுள்ளது. அதே சமயத்தில் தனது சொந்த மண்ணில் 85% தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
கடைசி 10 வருடங்களில் தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகள் மட்டுமே இந்திய அணியை ஒரு நாள் தொடரில் அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடிய கடைசி 20 ஒருநாள் தொடர்களில் 17 தொடர்களை வென்றுள்ளது. தற்போது இந்திய அணி பாகிஸ்தான் அணியை தவிர மற்ற அனைத்து சர்வதேச அணிகளையும் ஒருநாள் போட்டியில் வென்றுள்ளது. இந்திய அணி தனது சொந்த மண்ணில் 2011 உலகக் கோப்பையும் வென்றது. இந்திய அணிக்கு எப்பொதுமே தனது தாய் மண் சாதகமாக இருக்கும் என்பது சந்தேகமில்லா உண்மையாகும்.
இந்திய புள்ளி விவரங்களை பார்க்கும் போது ஆஸ்திரேலிய அணி இந்திய மண்ணில் இந்தியாவை டெல்லியில் நடைபெறவுள்ள தொடரை தீர்மானிக்கும் ஒருநாள் போட்டியில் வெல்வது மிகவும் கடினம். கடந்த முறை இந்திய மண்ணில் தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத் தக்கது.
#1 சொந்த மண்ணில் தொடரை தீர்மானிக்கும் போட்டி இந்தியாவிற்கு சாதகமாக இருந்து வந்ததாக கூறுகிறது கடந்த கால வரலாறு
சொந்த மண்ணில் தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இந்தியாவிற்கு அமைவது இது முதல்முறை அல்ல.
கடந்த முறை மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-1 என்ற நிலையில் இருந்த போது மேற்கிந்தியத் தீவுகள் அணி 4வது ஒருநாள் போட்டியில் தொடரை சமன் செய்யும் நோக்கில் களமிறங்கியது. ஆனால் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகள் அணியை 104 ரன்களில் சுருட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று 3-1 என தொடரை கைப்பற்றியது.
டிசம்பர் 2017ல் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை அணி தர்மசாலாவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. இந்திய அணி மொகாலியில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று சமநிலையில் இருந்த போது விசாகப்பட்டினத்தில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என மற்றொரு ஒருநாள் தொடரை தனது சொந்த மண்ணில் வென்றுள்ளது.
இலங்கையைப் போலவே நியூசிலாந்து அணியும் அக்டோபர் 2017ல் நடந்த ஒருநாள் தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று, அடுத்த 2 ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியிடம் தோல்வியை தழுவியது. அத்துடன் 2016 அக்டோபரில் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது போலவே 2-2 என இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சமநிலையில் இருந்த போது கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 190 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடந்த முறை 2013ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 2-2 என சமநிலையில் இருந்த போது பெங்களூரில் நடந்த தொடரை தீர்மானிக்கும் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசினார்.
இந்த புள்ளி விவரங்களை வைத்து பார்க்கும் போது இந்திய அணியை தொடரை தீர்மானிக்கும் போட்டியில் அசைக்க கூட முடியாது எனத் தெள்ளத் தெளிவாக நமக்கு தெரிகிறது.
மார்ச் 13ல் டெல்லியில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியா உடனான தொடரை தீர்மானிக்கும் போட்டியிலும் இதே நல்ல முடிவுதான் இந்திய அணிக்கு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.